'500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கையால், ஏழைகளும் விவசாயிகளும் பலன் அடையப் போவது உறுதி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை நிலை குறித்து வெளியிட்ட 7 பதிவுகள்:

* ஊழல், தீவிரவாதம், கறுப்புப்பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய வேள்வியில் உளபூர்வமாக பங்கெடுத்துள்ள இந்தியமக்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

* நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும்விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கட்டாயம் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே அரசு இந்தமுடிவை எடுத்தது.

* நான் ஏற்கெனவே கூறிய படி, இந்த குறுகிய கால வலி, நீண்ட கால நற்பலன்களுக்கு வழிவகுக்கும்.

* நமது கிராமங்கள் வளம்பெற்று முன்னேறுவதை இனியும் கறுப்புப்பணத்தாலும், ஊழலாலும் தடுக்க முடியாது. நம் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.

* இவற்றுடன், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை பரவலாக்கவும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை முன்னுக்குக் கொண்டுவரவும் இந்தப்பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒருவரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

* என் அருமை இளம் நண்பர்களே, ரொக்க மில்லா பணப் பரிவர்த்தனைகளை அதிகப் படுத்தி, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உங்களால்மட்டுமே முடியும். அதற்கான மாற்றத்தை நீங்கள் தான் சாத்தியப்படுத்த வேண்டும்.

* நாம் எல்லோரும் சேர்ந்து கறுப்புப்பணத்தை ஒழித்துக்கட்டுவோம். இதன் மூலம் ஏழைகளும், நடுத்தர மக்களும் உரிய அதிகாரத்தைப் பெறுவார்கள். வருங்காலத் தலைமுறையினர் பலன் அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.