ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்வகையில், கிரடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பணப் பரிமாற்றம் செய்யப் படுவதற்கு சேவைவரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: கிரடிட், டெபிட்கார்டு மூலம் ரூ. 2 ஆயிரம் வரை ஒரேநேரத்தில் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு சேவைவரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் அறிவிப்பார் என தெரிவித்தன.


ரூபாய்நோட்டு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, பணம் எடுக்க வங்கிகளிலும் ஏ.டி.எம்.,களிலும் பொதுமக்கள் நீண்டவரிசையல் காத்திருக்கின்றனர். டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறவேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், ரூ.2 ஆயிரம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது

Leave a Reply