இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல் காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:


பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். அவருக்கு முதலில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.நாங்கள் பேசக்கூடிய பிரதமரை தந்திருக்கிறோம். நீங்கள் நாட்டுக்குதந்த பிரதமர் (மன்மோகன்சிங்) குரலை நாட்டுமக்கள் கேட்டதே இல்லை. அவரது குரல் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் (சோனியா) மட்டுமே தெரியும்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்தியஅரசின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தின் போது சுமார் 12 லட்சம்கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றன. எங்கள் தலைமையிலான பாஜக அரசின் மீது எதிர்க் கட்சிகளால் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டைகூட சுமத்த முடியவில்லை.


அந்த அளவுக்கு தூய்மையான, வெளிப்படையான ஆட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக ஏற்று செயல்படக் கூடிய பிரதமரை நாங்கள் தந்திருக்கிறோம். எங்கள் தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்கு நன்மைதரும் 92 நலத்திட்டங்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.


சமீபகாலம் வரை கருப்புப் பணத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று எங்களை பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர் .ஆனால், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்குபிறகு இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்கதொடங்கி விட்டனர்.


கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வேரூன்றி போன கருப்புப் பணத்துக்கு ஒரேயொரு அதிரடி நடவடிக்கையின் பிரதமர் மோடி முடிவு கட்டியுள்ளார். இதன் மூலம் லஞ்சம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். கருப்புப்பணத்துக்கு எதிரான இந்தப்போர் இனியும் தொடரும்.இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கும்பணம் விவசாயிகள், தலித்மக்கள், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவிடப்படும்.


கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு என்ன செய்திருக் கிறது? எங்களை பார்த்து ராகுல் காந்தி கேட்கிறார். ஓய்வுக்காக அதிகநாட்களை செலவிடுவதால் உங்களால் நாட்டில் நடக்கும் நல்லசெய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை. அதுமட்டுமின்றி, நீங்கள் அணியும் மூக்குகண்ணாடி (கூலிங்கிளாஸ்) இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதை கழற்றி வைத்துவிட்டு, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட மூக்குகண்ணாடி (கூலிங்கிளாசை) அணிந்துகொண்டு பாருங்கள். அப்போதுதான், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் உங்களுக்கு தெளிவாகதெரியவரும் என்று கூறினார் அமித்ஷா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.