கடந்த இரண்டு வருடமாக இந்தியாவுக்கு கச்சாஎண் ணை விலைவீழ்ச்சியினால் ஒரே கொண் டாட்டமாக இருந்தது.பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுக்குள் இருந்து இந்திய பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது .ஆனால் இனி கச்சா எண்ணை விலை அதிகரிக்கவே வாய்ப்புள் ளது. கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒபெ க் அமைப்பு நாளொன்றுக்கு சுமார் 12 லட்சம் பேரல் அள வு க்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.ஆனால் இதையெல்லாம் எதிர் கொள்ளும் வகையில் இந்தியாவை மோடி தயார் செய்து விட்டார் என்றே சொல்லலாம்.இனி வரும் கால ங்களில் இந்தியாவின் எரிபொருள் தேவையை ரஷ்யா வும் அபுதாபி யும் தீர்த்து வைக்கும் அளவிற்கு மிகப் பெரிய திட்டங்க ளை மோடி நிறைவேற்றிவிட்டார் என்றே சொல்லலாம்

இந்தியாவின் எரிபொருள் தேவை தினசரி 42 லட்சம் பேரல் களாக உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து எரி பொருள் தேவையில் இந்தியா மூன்றாவது நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் பெட் ரோல்,டீசல் பயன் பாட்டிற்கு 80% அளவுக்கு கச்சா எண் ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டுவருகிறது

சவூதிஅரேபியா, ஈராக்,வெனின்சுலா, குவைத், நைஜீரி யா, கத்தார்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.இத ற்கு நாம் வருடத்திற்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் பணத்தினை இதற்காக அமெரிக்க டாலராக மாற்றி சம்பந்தபட்ட நாடுகளுக்குபட்டுவாடா செய்கிறோம்.

இது வரை சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைவாக இருந்ததற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான்.ரஷ்யாவின் பொருளாதாரத்தை காலி செய்ய நினைத்த அமெரிக்கா சவூதிஅரேபியாவின் பெட்ரோலிய உற்பத்தியை அதிகமாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரல்கள் உற்பத்தி செய்ய வைத்து கச்சா எண்ணெயின் சந்தை மதிப்பை காலி செய்து விட்டது.

சரிப்பா..ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள பிரச்சனைக்கும் பெட்ரோல் டீசல் விலை உய்ர்விற் கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.உலகிலேயே அதிக கச்சாஎண்ணையை உற்பத்தி செய்யும் முதல்
நாடு சவூதி அரேபியா.அடுத்து ரஷ்யாதான்.உலகிலேயே அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்தும் நாடு அமெரிக் காதான்.அடுத்து சீனா மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கச்சாஎண்ணை உற்பத்தியில் உலகில் நம்பர்-1 நாடான சவூதி அரேபியா ஒரு அமெரிக்காவின் அடிமை நாடு. இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவே பொறுப்பே ற்று ள்ளது.இன்றைய தேதியில் இந்தியா சவூதி அரேபி யாவிட ம் இருந்து தான் குரூட் ஆயிலை இறக்குமதி செய்து பதிலு க்கு அமெரிக்க டாலராக கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஏனப்பா.நாம் சவூதி அரேபியாவிடம் இருந்து தானே குரூட் ஆயிலை இறக்குமதி செய்கிறோம்.அதற்கு அவர் களின் நாணயமான ரியாலில் பேமன்ட் கொடுக்க வேண் டு ம் இல்லைஎன்றால் இந்தியாவின் ரூபாய் மதிப்பில் கொடுக்க வேண்டும் .ஆனால் ஏன் அமெரிக்காவின் டாலர் மதிப்பில் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேள்வி கேட்டால் இனி பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்கிறது. என்று கேள்விகேட்க மாட்டீர்கள்..

இன்றைக்கு நாம் அமெரிக்க டாலரில் குரூட் ஆயிலை வாங்குவதற்கு முக்கிய காரணம் ஒரு போர் தான் .பெட் ரோல் டீசல் விலை ஏறி இறங்க அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் நடக்கும் மறைமுக அரசியலே உலகம் நாசமாக முக்கியமான காரணம்..யோம் கிப்பூர் என்கிற ஒரு சண்டையே இன்று நாமெல்லாம் குரூட் ஆயில் வாங்க அமெரிக்க டாலரில் அள்ளிக்கொடுக்க பிள்ளை யார் சுழி போட்டது.

யூதர்கள் கொண்டாடும் ஒரு சிறந்த பண்டிகை யோம் கிப்பூர் என்கிற மன்னிப்பு வேண்டும் நிகழ்ச்சிஅதாவது ஹீப்ரு மொழியில் யோம் கிப்பூர் என்றால் இறைவ னிடம் மன்னிப்பு கேட்பதாகும்.இந்த நாளில் இஸ்ரேலில் யூதர்கள் எந்த வேலையாக இருந்தாலும் விடுமுறை யில் தான் இருப்பார்கள்.ஏன் ராணுவத்தினர் கூட விடுமு றையில் தங்கள் குடும்பத்தோடு இருந்து அன்பை பரிமாறி இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.

இந்த முக்கியமான நாளில் இஸ்ரேல் ராணுவம் விடு முறையில் இருக்கும் என்பதை அறிந்த எகிப்து, சிரியா ஈராக் ஜோர்டான் சவூதி அரேபியா நாட்டுப் படைகள் சோவியத் யூனியன் பின்னால் நின்று இயக்க இஸ்ரேலை போட்டு தாக்கியது.ஆரம்பத்தில் விடுமுறை யை கழித்துக்கொண்டு இருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கள் சோம்பல் துறந்து எழுவதற்குள் அரபுபடைகள் இஸ்ரேலை சூறையாட ஆரம்பித்தார்கள்..எல்லாம் ஒரே ஒரு நாள் தான்.மறு நாள் முதல் அரபு படைகள் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.இந்த போரிலும் இஸ்ரேலுக்கே வெற்றி.

போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல் இதற்கு பைனான்ஸ் செய்த சவூதி அரேபியாவின் எண்ணை வயல்களை காலி
செய்வோம் என்று அறிவிக்க சவூதி அரேபியா அலறி அடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் போய் காப்பாற்றுங் கள் எஜமான் என்று கண்ணீர் வடித்தது.அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் தம்பி.நான் உனக்கு
பாதுகாப்பு தருகிறேன் .பதிலுக்கு நான் சொல்கிற படி நீ கேட்க வேண்டும் என்று கூற சவூதி அரேபியாவும் தலை
யாட்ட ஆரம்பித்தது.

அமெரிக்கா சவூதி அரேபியாவுடன் தம்பி உங்க உயிரு க்கு நான் கேரண்டி பதிலுக்கு உங்க சொத்தை எழுதி கொடுங் கள் என்று கேட்க சவூதி அரேபியா முழிக்க ஆரம்பித்தது.உடனே நிக்சன் நீங்க கச்சா எண்ணை விற்பதை இனி அமெரிக்க டாலரில் தான் செய்ய வேண் டும் என்று உத்தரவு போட சவூதியும் சரிஎன்று தலை யாட்டி அக்ரி மெண்டில் கையெழுத்து போட்டுவிட்டது.

சரிப்பா..சவூதி தலையாட்டினால் போதுமா..மற்ற ஓபெக் நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள் என்று நீங்கள் கேட்கலாம்..அதுவும் அந்த வெனிசுலா சும்மா இருக்காதே என்ற கேள்வி நியாயமானது தான்.
ஆனால் வேறு வழியில்லை.அன்றும் இன்றும் உலக அளவில் எரி பொருளை பயன்படுத்தும் முதல் நாடு அமெரிக்கா தான்.அதனால் அனைவரும் அமெரிக்கா வின் காலில் விழ ஆரம்பித்தார்கள்.

இதில் காமெடி என்ன வென்றால் யாருக்கு பயந்து சவூதி அரேபியா அமெரிக்காவிற்கு அடி பணிந்ததோ அந்த இஸ்ரேல் அமெரிக்காவின் உயிர் தோழன்.இது தாங்க அரசியல்.இந்த அரசியல் தான் அமெரிக்காவை இன்றும் உலக வல்லரசாக வைத்துள்ளது.

இந்த அரசியலால் தான் கச்சா எண்ணை விலை உயர்வ தும் குறைவதும் நடந்து வருகிறது.இரண்டு வருஷத் திற்கு முன் 100 டாலரருக்கு மேல் விற்ற ஒரு பேரல் கச்சா எண்ணை 30 டாலருக்கு எப்படி வந்தது என்றால் உக்ரை னில் முறைத்து நின்ற ரஷ்யாவை பொருளாதார ரீதியில் வீழ்த்த ஒபாமா விளையாடிய சகுனி ஆட்டத்தி னால் தான் உலகளவில் கச்சா எண்ணை விலை குறை ந்தது
.
சவூதி அரேபியாவிற்கு அடுத்து உலகில் அதிக அளவி ல் கச்சா எண்ணையை விற்கும் நாடு ரஷ்யா தான் ஆனால் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலர்.இதற்கு குறைந்து விற்றால் ரஷியாவில் கட்டுபடியாகாது.இதனால் சவூதி
அரேபியாவை கச்சா எண்ணையை அதிகளவில் உற்பத் தி செய்ய வைத்தது அமெரிக்கா.எந்த ஒரு பொருளுக்கும் தட்டுப்பாடு இருந்தால்தான் மதிப்பு இருக்கும் என்பது அடிப்படை உண்மை..

இப்பொழுது பாருங்கள் நம் நாட்டில் பணத்தட்டுபாடு கார ணமாக மூடி இருக்கும்ஏடிஎம்மை தேடி இரவில் கூட தூங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்னால் பாதி ஏடிஎம்மில் நாய் தான் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தது.பணத்தின் அருமையை மிக அருமையாக இந்தியர்களுக்கு புரிய
வைத்துவிட்டார் மோடி.

கச்சா எண்ணையை அதிகளவில் உற்பத்தி செய்து பெட்ரோல் டீசலை இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்க வைத்தது சவூதி அரேபியாதான். ஒபெக் நாடுகள் செய்த அதிக உற்பத்தியால் விலை குறைந்து ரஷ்யாவின் கஸ்டமர்கள் இடம் மாற ஆரம்பித்தார்கள். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் டான்ஸ் ஆட ஆரம்பித்தது

கூடவே சவூதி அரேபியாவிலும் பொருளாதாரம் இறங்க ஆரம்பித்தது. பின்னே இருக்காதா,,நூறு ரூபாய்க்கு ஒரு
பொருளை விற்ற இடத்தில் 30 ரூபாய்க்கு விற்றால் என்ன என்ன லாபம் கிடைக்கும் நீங்களே சொல்லுங்கள்..
அதனால் மீண்டும் சவூதி அரேபியா கச்சா எண்ணை உற்பத்தியை மேலும் குறைக்க போகிறது.இதனால் சர்வதேச அளவில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்த இடத்தில் தான் மோடி என்கிற ஜீனியஸ் வந்து நிற்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறைகள் வந்தவுடன் பிப்ரவரி மாதத்தில் அபுதாபி இளவரசரு டன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அது என்ன தெரியுமா? அபுதாபி யில் உள்ளது அட்னக்(ADNOC) Abu Dhabi National Oil Company என்கிற நிறுவனத்துடன் பத்து ஆண்டுகளு க்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்..எப்படி தெரியுமா இந்தியா இனி உங்களி டமே அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ளும்.பதிலுக்கு இந்தியாவில் உள்ள எண்ணை கிடங்குகளில் 15 லட்சம் டன் குரூட் ஆயிலை ப்ரீயாக சேமித்து வைக்க வேண்டும் என்பதே.

அடுத்து கத்தார் நாட்டு ராஸ் கேஸ் நிறுவனத்துடன் மிக குறைந்த விலையில் அதாவது சந்தை மதிப்பில் பாதி
விலையில் இயற்கை எரிவாயுவைஇறக்குமதி செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.இதை எல் லாம் விட சமீபத்தில் ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தம் தான் சூப்பர்.

ஒபாமா மாதிரி வரும் அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் அனுசரணையாக இருக்க மாட்டார்கள் என்று கணித்த மோடி ரஷ்யாவுடன் ஒரு சூப்பர் டீல் செய்துள்ளார்,அதன் படிஇந்தியாவில் இருக்கும் எஸ்ஸார் ஆயில் நிறுவனத் தை சுமார் 80,000 கோடி ரூபாய்க்கு ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட்க்கு விற்று விட்டார்.

இதனால் என்ன லாபம் என்கிறீர்களா..இந்தியா இனி சவூதி அரேபியாவின் கச்சா எண்ணையை நம்பி வண்டி ஓட்ட வேண்டிய அவசியமில்லை.ரஷ்யாவே இனி நேரடி யாக் குரூட் ஆயிலை கொண்டு வந்து எஸ்ஸார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்களில் வைத்து பெட் ரோல் டீசலை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பிப்பா ர்கள். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையும் பூர்த்தியாகும். விலையும் ஏறாமல் இருக்கும்.

அதோடு முக்கியமான நன்மை என்ன வென்றால் ரஷ்யா நேரிடையாக இந்தியாவில் எண்ணை நிலைய ங்களை வைத்திருப்பதால் அதற்கு பாதுகாப்பு கொடுக் கும் பொருட்டு இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆரம்பிக் கும்.ஒரு வேளை சீனா இந்தியாவை தாக்க நினைத்தால் தன்னுடைய பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்கிற சுயநலத்துடன் ரஷ்யா இந்தியாவிற் கு ஆதரவாக இருக்கும்.

இப்படி தொலை நோக்கு திட்டங்களை மோடி எடுத்து வைத்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பும் கூடிக்
கொண்டிருக்கும்.அதோடு வரும் காலத்தில் உலகள வில் கச்சா எண்ணெய் விலை மாதிரியே மோடியின் புகழும் ஏறிக் கொண்டு இருக்கும்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.