ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது, கருப்புப் பணம் வைத்திருக்கும் முக்கியப் புள்ளிகள் வசமாக சிக்கிவிட்டன்ர்.

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரி வாயு உருளைகளின் எண்ணிக்கையை 9-இலிருந்து 12-ஆக உயர்த்தியதை சரித்திரசாதனையாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கூறிவந்தது. அதற்குப்பிறகு மத்திய ஆட்சியமைத்த பாஜக அரசோ, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் 5 கோடி மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது.


18,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 18-ஆம் நூற்றாண்டில் இருந்ததைப்போல இருளில் மூழ்கிக்கிடந்தன. பாஜக ஆட்சிக்குவந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் 12,000 கிராமங்களில் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களிலும் அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


இதைத்தவிர ஏழைகள் நலன்காக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. தற்போது முத்தாய்ப்பாக கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய ரூபாய்நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.


இந்த அறிவிப்புக்குப்பிறகு, அலமாரிகளிலும், பூமிக்கடியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பலகோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணம், வங்கிகளில் டெபாசிட்செய்யப்பட்டு வருகின்றன. கருப்புப் பணத்தை வெளிக்கொணரும் காவலாளியாக எனதுபணியை நான் முழுமையாக செய்துவருகிறேன். இந்த முயற்சியின் விளைவாக, சில இருள் நிறைந்த இதயங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டமுடிந்தது.


மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில், கொள்ளைக்கூட்டத்தின் முக்கியத் தலைவர்களே வசமாக சிக்கிக் கொண்டதால், அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர்.


கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சிலரது ரத்தத்தில் ஊழல் இரண்டறக்கலந்துள்ளது. பின்வாசல் வழியாக (மறைமுகமாக) கருப்புப்பணத்தை மாற்றினால் மோடிக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்தையும் மத்திய அரசு கவனித்து கொண்டேதான் இருக்கிறது. அதன் காரணமாகவே கருப்புப்பண முதலைகள் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.


ஊழலுக்கும், கருப்புப் பணத்துக்கும் எதிரான இந்த அதிரடி நடவடிக்கைக்கு முழு ஆதரவினை நல்கிவரும் மக்களுக்கு நன்றி. பிரகாசமான எதிர் காலம் மக்களுக்கு காத்திருக்கிறது .

உத்தரகண்டில் டேராடூன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியது

Leave a Reply