அருணாச்சல பிரதேச முதல்வர் பேமாகாண்டு தலைமையிலான 33 எம்எல்ஏக்கள் மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து அங்கு பாஜக ஆட்சிஅமைந்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் முதல்வராக பொறுப் பேற்றிருந்த பேமாகாண்டு, கடந்த செப்டம்பர் மாதம் 42 எம்எல்ஏக்களுடன் அக்கட்சியில் இருந்துவிலகி, அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து முதல்வர் பொறுப்பையும் வகித்துவருகிறார்.

இந்நிலையில், கட்சி விரோத செயலில் ஈடுபடுவதாகக் கூறி, முதல்வர் பேமாகாண்டு, துணை முதல்வர் சவுணா மேயின் மற்றும் 5 எம்எல்ஏக்களை அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்து அருணாச்சல் மக்கள்கட்சி வியாழக்கிழமை இரவு தற்காலிகமாக நீக்கியது.

இதையடுத்து, தகம் பாரியோ புதியமுதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, ஆளும் வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் அங்கம்வகிக்கும் அருணாச்சல் மக்கள் கட்சியின் தலைவர் காஃபா பெங்கியா தெரிவித்தார். இவருக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மேலும் 4 எம்எல்ஏக்களை மக்கள்கட்சி இடைநீக்கம் செய்தது. இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவர் டென்சிங் நொர்புதொங்டாக்கை சந்தித்த பேமா காண்டு, தாங்கள் பாஜகவில் சேரப் போவதாகக் கூறினார். அப்போது, மக்கள் கட்சியைச் சேர்ந்த 43-ல் 33 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். இதைதொங்டாக் ஏற்றுக்கொண்ட அவர், அவர்களை பாஜக உறுப்பினராக அங்கீகரித்தார். ஏற்கெனவே பாஜகவுக்கு 11 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

இதுகுறித்து முதல்வர் பேமாகாண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அருணாச்சல பிரதேசத்தில் பலஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. எனவே, மாநிலவளர்ச்சியை கருத்தில்கொண்டு மக்கள் கட்சியில் இணைந்தோம். ஆனாலும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மக்கள் கட்சித்தலைவர் எம்எல்ஏக்களை ஜனநாயக விரோத அடிப்படையில் நடத்துகிறார். குறிப்பாக, எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு முன்பு அவர் விளக்கம்கோரி நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

அரசு நிலையானதாக இல்லை என்றால் வளர்ச்சியே இருக்காது. எனவே, மாநிலத்தின் எதிர்காலவளர்ச்சியை கருத்தில்கொண்டு பாஜகவில் இணைந்துள்ளோம். இங்கு இறுதியாக தாமரை மலர்ந்துள்ளது.

2016-ம் ஆண்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடித்ததால் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டிருந்தன. ஆனால் புத்தாண்டில் புதிதாக அமைந்துள்ள அரசு, மத்தியில் ஆளும் அரசுடன் இணைந்து இந்தமாநில மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply