ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி 31-ம் தேதி கூட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவை என்று பாஜக விமர்சித்துள்ளது.


இதுதொடர்பாக, தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


ஐந்து மாநில சட்டப் பேரவைத்தேர்தல்களில் தங்களின் தோல்வியும், பாஜகவின் வெற்றியும் நிச்சயமாகும். அண்மையில் எடுக்கப்பட்ட ஒருகருத்துக் கணிப்பும் இத்தேர்தல்களில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்றே தெரிவிக்கிறது. இதனால், எதிர்க் கட்சிகள் பீதியில் உள்ளன. இந்தக்கட்சிகள் அனைத்தும் எதிர்மறை அரசியலை நடத்திய வரலாறு உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதை எதிர்ப்பதன் மூலம் தாங்கள் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவர்கள் என்பதை அவை மீண்டும் உணர்த்தி யுள்ளன.


மத்திய அரசு ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் நன்மைபயக்க கூடிய பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அவற்றுக்கு உரியகாலத்தில் பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் பட்ஜெட்தாக்கல் செய்யப் பட்டால்தான் அது சாத்தியமாகும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது என்பது அரசியல்சாசன ரீதியிலான தேவையாகும்.

அதை நிறைவேற்றவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனினும், ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், தேர்தல் நடத்தை விதி முறைகளை கருதி, அந்த மாநிலங்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப் படும் பட்ஜெட்டில் இடம்பெறாது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.