ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பணப் பரிமாற்றம் 50 சதவீதம் வீழ்ச்சி யடைந்ததுடன், காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும் 60 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஊக்குவிக்க அளிக்கப்படும் கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப் படுகின்றன. பாகிஸ்தானின் குவிட்டா நகரில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பரிவர்த்தனை 50 சதவீதம் பாதிக்கப் பட்டது. இதனால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பணம்கொடுக்க முடியவில்லை. காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பணம்கொடுக்க முடியவில்லை.


இதனால், டிசம்பர் மாதத்தில் காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் 60 சதவீதம்குறைந்தன. காஷ்மீரில் இயங்கிவரும் பயங்கரவாதிகளுக்கு, கைகளில் ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ்காரணமாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிபெற்றன.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, நக்சலைட்களுக்கு கடும்பாதிப்பு ஏற்பட்டது. அவர்களின் வருமானம் குறைந்ததுடன், அவர்கள் வைத்திருந்த சொத்துகளும் குறைந்தது. இதனால், அவர்கள் பதுக்கிவைத்திருந்த பணத்தை மாற்றித்தரும்படி பொதுமக்களிடம் கெஞ்ச துவங்கினர்.


ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, நக்சலைட் அமைப்பிடமிருந்து ரூ.90 லட்சம்வரை பறிமுதல் செய்யப்பட்டது. பல நக்சலைட்கள் பாதுகாப்பு படை யினரிடம் சரணடைந்தனர். வட கிழக்கு மாநிலங்களில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளும், ஆயுதங்கள்வாங்க முடியாமல் சிரமப்பட்டதுடன், அவர்களுக்கு கடும் இழப்புஏற்பட்டது எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.