இந்திய தேசிய கொடி போன்று கால்மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மாசுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல ஆன்லைன் வர்த்தக இணைய தளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசியகொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து தனது இணைய தளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது.

விற்பனைக்கு வெளியான அரைமணி நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்திய தேசியகொடியை அவமதிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து பொருட்களையும் திரும்பபெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்.

உடனடி மன்னிப்பு கேட்காவிட்டால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்தியவிசா வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்களும் ரத்துசெய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, இதேபோல், பெண்கள் அணியும் லெக்கின்ஸ் ஆடைகளில் இந்துகடவுளின் படம் பொறித்து விற்பனைக்கு வந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply