சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில், சசிகலாவின் கணவர் நடராஜன், "நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் " என்றும் தமிழகத்தில் குழப்பத்துக்கு காரணம் குருமூர்த்தியும், பாரதிய ஜனதாவும் தான் என்றும், வீரமணி போல் -இதை ஆரிய- திராவிட விஷயமாக மாற்ற முயலுவதும் சரியா?

 
குருமூர்த்தி தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே கிடைத்த தவப்புதல்வர்களுள் ஒருவர். அடிக்கடி நான் சொல்லி வருகிறேன். குருமூர்த்தி கையில் ஒரு விவகாரம் சிக்கினால் விட மாட்டார். அது மாறன் சகோக்களாகட்டும் அல்லது சிதம்பரம் குடும்பமகாட்டும் அல்லது சசிகலா குடும்பமாகட்டும்..

அவர்கள் வசமாக குருமூர்த்தியிடம் சிக்கிக் கொண்டு விட்டனர்.

நடராஜன் 30 வருடங்களாகப் போட்ட கணக்கில் பிழை இருப்பதால் தான் குருமூர்த்தி இவர்களுக்கு எதிராக வெடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் பழைய ஆரிய- திராவிட பஜனை பண்ணிக் கொண்டு அதை திசை திருப்ப முனைகிறார்கள்..

தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இனி வரக்கூடாது. அது போல் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சியும் இனி இருக்கக் கூடாது. மாநிலத்திலும் கூட்டாட்சி தான் வரப் போகிறது..

மாறன்- நீதிமன்றத்தில் நெருக்கப்படும் போது குருமூர்த்தியை ஆர்.எஸ். எஸ் சதி என்று திசை திருப்ப முயன்றார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்; நிரூபி என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார், குருமூர்த்தி.

திராவிடர்கள் விழி பிதுங்குகிறது..

அது போல் நடராஜன். அவர் அதிமுகவை தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் பக்தனாகிய நான் அதிமுக வித்தியாசமான கட்சி.அதன் தலையெழுத்தை அதன் தொண்டர்கள் தான் நிர்ணயிப்பார்கள்.. என்று சொல்லி வருகிறேன்.

அதைத் தான் குருமூர்த்தி அவர் பாணியில் சொல்லும் போது, நடராசன் – ஆரியன், திராவிடன் , பாப்பான் என்று சொல்லி தனக்கு பத்தை கட்டுகிறார்.

நன்றி ; ஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.