தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண்விஜய் தலைமையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லியில் நேற்று மெழுகு வர்த்தி ஏந்தி ஆதரவு முழக்கமிட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

தருண்விஜய் தலைமையில் டெல்லி மீனா பாக் பகுதியில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி, தேரி உள்ளிட்ட சிலபகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

"எனது உயிர் ஜல்லிக்கட்டு', "தமிழக மக்களின், இந்தியாவின் அடை யாளம் ஜல்லிக்கட்டு' என்று அவர்கள் முழக்கமிட்டனர். 


போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தருண்விஜய், "தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து சங்க கால இலக்கியத்திலும்  சான்றுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வீரம்மிக்க மக்களின் விளையாட்டாக பாராட்டுபெற்றது. ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளை சிவனின் வாகனமாகவும் திகழ்கிறது. காளையை அடக்கும்நிகழ்வானது நமது நாகரிகத்தின் ஒருபகுதி. இது தமிழ் மக்களின், இந்திய நாட்டின் அடையாளம்.


ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு என்பது இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாசாரத்தின் மீதான எதிர்ப்பாகும். ஜல்லிக் கட்டை எதிர்க்கும் நபர்கள் இந்தியாவின் செறிந்த கலாசாரத்தையும், பாரம்பரி யத்தையும் அறியாதவர்கள்" என்று தெரிவித்தார்.

"ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள், விவசாயிகளுக்கு எதிராகவே செயல் படுபவர்கள். தமிழ் பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள். ஜல்லிக் கட்டை நடத்தக் கோரி போராட்டம் நடத்தும் தமிழகமக்களும், இளைஞர்களும் பாராட்டுக் குரியவர்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்தக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடவடிக்கையை தேசியளவில் ஒருஇயக்கமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்கிடைக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.