பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தங்களது உணர்வுகளை இளைய தலைமுறையினர் கூட்டம்கூட்டமாக கூடி பண்பாட்டிற்கும் ஆதரவாக களமிறங்கி இருக்கிறது. தமிழ் பண்பாட்டு உணர்வோடு இறங்கிய வர்களை தலை வணங்கி வரவேற்கிறோம்.

காரணம் சுய நலமில்லாமல் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக என்னை விமர்சிக்கிறார்கள், அதைப்பற்றி கவலைப் படவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை பாரதிய ஜனதா கட்சி ஓயாது.

ஒவ்வொரு நாளும் தொய்வில்லாது பா.ஜ.கட்சி போராடிவருகிறது என்பதை தமிழகமக்களுக்கு கூறுகிறோம். அகில இந்திய தலைமை உட்பட இதை பதிவுசெய்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்போம் என கூறுவது அதாவது மீட்டெடுக்கும் வகையில் தொலைத்தது யார்?

ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கியபோது என்ன செய்தீர்கள்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசரச் சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை. அகில இந்திய தலைமையோடு பேசியிருக்கிறோம். 20-ந்தேதி 12 மணிக்கு தமிழக பாஜக. சார்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோடு இணைந்து டெல்லிசென்று தலைவர்களை, சுற்றுச் சூழல் அமைச்சரை சந்திக்க இருக்கிறோம்.

எங்களை விமர்சிப்பவர்களை புறந்தள்ளுகிறோம், பா.ஜனதா கட்சியின் முயற்சியில் உண்மையும் சத்தியமும் இருக்கிறது. மாணவர்களை கேட்டுக்கொள்வது உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். மாணவர்கள் பா.ஜனதா கட்சி மீது வீசுகிற கணைகளை ஏற்றுக்கொள்கிறோம், நம்பிக்கையோடு காத்திருங்கள்.

தமிழக அரசுக்கு விடுக்கும்கோரிக்கை என்னவென்றால் அடக்குமுறை வேண்டாம் அணுகுமுறையில் மாற்றம் வேண்டாம், வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கவேண்டும், கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். நாங்கள் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாமதமாக வருவதற்கு மத்திய அரசை குறை கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

கே: மாணவர்கள் போராட்டம் நான்கு நாட்களாக நடைபெறுகிறது. மத்தியஅரசிடமிருந்து எந்த அறிவிப்பு இல்லை என மாணவர்கள் குறை கூறுவது பற்றி, சம்பந்தப்பட்டதுறை அமைச்சர் கூட கருத்து கூற மறுப்பது ஏன்?

ப: நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் என்னிடம் கூறி தான் நான் மாணவர்களோடு இருக்கிறோம் எனக் கூறச்சொன்னார்.

கே: பொங்கலுக்கும் ஜல்லிக் கட்டுக்கும் தொடர்புண்டு. பொங்கலுக்கு பிறகு அமைச்சரை சந்திப்பது ஏன்?

ப: நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசாணை பிறப்பித்ததால்தான் ஜல்லிக்கட்டு முடக்கப்பட இருந்த நிலை தவிர்க்கப் பட்டுள்ளது. அரசாணை துரதிஷ்டவசமாக எடுபடாமல் போனது.

கே: மத்திய அரசு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கதடையாக இருப்பது எது?

ப: இது சட்ட ரீதியான பிரச்சினை மற்றும் தொழில் நுட்ப பிரச்சினை. உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராமல்போனால் மேற்கொண்டு முயற்சிகள் எடுப்போம்.

கே: மத்திய தலைமைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய அக்கறை இல்லையா?

ப: அப்படிஇல்லை, அக்கறை இருப்பதால் தான் வழக்காடுகிறோம். அரசாணை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து வழக்காடி இருக்கிறோம்.

கே: பிரதமருக்கு இந்தப்பிரச்சினை எடுத்து செல்லப்பட்டுள்ளதா?

ப: பிரதமருக்குத் தெரியும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர் இதுகுறித்து பதில் சொல்ல முடியாது. பாரதிய ஜனதா கடைசி வரை போராடும்.

கே: கேரளாவில் யானையை காட்சிப் பொருளில் சேர்க்க தமிழக பா.ஜ.க. நடவடிக்கை எடுக்க முடியுமா?

கே: அது கேரளாவின் பிரச்சினை. பீட்டா அமைப்பை தடை செய்ய கோரிக்கை வைக்கிறோம். மோடியால்தான் வாடிவாசல் திறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.