ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடியை விமர்சனம்செய்த மக்களவைத் துணைத்தலைவர் மு. தம்பிதுரைக்கு தமிழக பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் உதவியோடு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக பேட்டியளித்த மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை மிகத்தவறாக பிரதமரை விமர்சனம் செய்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.


அவர் சொன்ன கருத்துகள் உண்மையான கருத்துகள்அல்ல என்று தெரிந்தபிறகும் வேண்டுமென்றே பிரதமரை விமர்சிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கிறார். அதுவும் மாநில அரசுக்கு ஒரு மாபெரும் உதவியை பிரதமர் மோடி செய்திருக்கும் இந்தத்தருணத்தில் இப்படிப் பேசுவது எந்தவித நாகரிகம் என்பதை அவர் உணர வேண்டும். அதுமட்டுமல்லாது தாங்கள் சந்திக்கவேண்டும் என்ற சரியான நேரத்தை குறிக்காமல் பார்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டு இன்று அரசியல்செய்பவர், அவசரச்சட்டம் மாநில அரசு கொண்டு வர முடியும் என்ற நிலை இருந்தும் அதைப்பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.


இரண்டு ஆண்டுகள் மேல்முறையீட்டைக்கூட நடத்த முடியாதவர்கள் இன்று பிரதமரை விமர்சிக்கிறார்கள் என்று தமிழிசை கடுமையாகச் சாடியுள்ளார்.

Leave a Reply