ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக. ஆட்சி நடந்துவருகிறது. இதனால், மத்திய அரசின் சமீபத்திய திட்டமான ‘ரொக்கமில்லா பரிவர்த்தனையை செயல் படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டிவருகிறது.
 
அதன் ஒருபகுதியாக, அம்மாநிலத்தில் பொருளாதாரம் படித்துவரும் 12-ம் வகுப்பு பள்ளிமாணவர்களின் பாடத்திட்டத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரம் ஆகியவற்றை அடுத்த கல்வியாண்டு முதல் சேர்க்க திட்டமிட் டுள்ளதாக அம்மாநில கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
 
பொருளாதார சீர்திருத்தத்தின் ஒருபகுதியான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ரொக்கமில்லா பரிவர்த்தனை ஆகியவற்றால் ஏற்பட்டநன்மைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை பாடமாக மாணவர்களுக்கு எடுக்கப்படும் எனவும் கல்விவாரியம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையில் நாட்டில் முதல் 5 மாவட்டங்களில் ஒன்றாகமாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. 
 
மேலும், ஜெய்ப்பூர் மெட்ரோரெயில் நிலையம் முழுவதுமாக, பணமில்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணிகள் டிக்கெட்டை பெறும்வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply