நம் மத்திய அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கொண்டு வருவதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. குறிப்பாக நம் பாரத பிரதமரை முதல்வர் சந்தித்தபோது, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையாக உள்ள நிலையில் மத்திய அரசால் சட்டம் கொண்டு வர முடியவில்லை என்ற நிலை இருந்தும், நம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து மாற்று ஏற்பாடாக நம் முதல்வர் சந்தித்தபோது மாநில அரசு சட்டம் கொண்டு வருவதற்கான அத்தனை வாய்ப்பை தெரிவித்ததால். முதல்வர் டெல்லியிலேயே தங்கி அவசர சட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உடனே உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சர், சுற்றுச்சுழல் அமைச்சர், கலாச்சார அமைச்சர் அத்தனை பேரையும் கையெழுத்திட வைத்து மற்றும் ஆளுநர் கையெழுத்திட்டதினால்தான் தமிழக அரசினால் சட்டம் இயற்றப்பட்டது.

அதுமட்டுமல்ல இது அவசர சட்டமாக இருந்தாலும், 1960 விலங்கு வதை சட்டத்தினை மாற்றி காளைகளை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா போன்றவற்றிற்காக விடுவித்து மிக வலுவான ஓர் ஜல்லிக்கட்டு சட்டத்தை சட்டசபையால் இயற்றுவதற்கு உதவியாக இருந்தது அத்தனையும் மத்திய அரசு. இவ்வளவு மத்திய அரசு செய்தும். அனைவருக்குமே இது தற்காலிக ஏற்பாடுதானோ என்ற சந்தேகம் எழுந்தது.

நம் மாணவ சொந்தங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களும் இதன் வலிமையையும், நிரந்தர தன்மையையும் உணராமல், பிரதமரை விமர்சனம் கூட செய்தார்கள். அது மட்டுமல்ல பா.ஜ.க தொடர் முயற்சி எடுத்து வந்தாலும். உச்ச நீதிமன்றத்தினால் ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரமுடியாததால் கட்சியும் விமர்சனத்திற்குள்ளானது . அனால் உண்மையில் பா.ஜ.க சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுதான் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்தர தீர்வு கொண்டு வருவதற்கு தடையாக இருந்ததே 2011- ல் அன்றைய மத்திய அரசு கொண்டு வந்த சட்டம்தான். அதாவது காளைகளை காட்சிப் பொருளாக்கி, காங்கிரஸ் அரசின் ஜெயராம் ரமேஷ் போட்ட சட்டம்தான். இந்த அறிவிக்கையை செயலிழக்கச் செய்யும் முன்னோட்டமாக 2016 அறிக்கையை திரும்ப பெறுகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது, இதனால் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

ஆக மத்திய அரசு, நம் தமிழர்களின், மாணவ  மாணவிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக மாற்றி இன்று நிரந்தர தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதற்க்கு நாம் மத்திய அரசுக்கும், பாரத பிரதமருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

   என்றும் மக்கள் பணியில்

   ( Dr. தமிழிசை சௌந்தரராஜன் )

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.