✌  காளையை காட்சி பட்டியலில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிவிக்கையும்,2014 ஆம் ஆண்டு காளையை ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கொடுத்த அறிவிக்கையும் வாபஸ். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பு ஜல்லிக்கட்டு நடத்த தடையாக வந்துவிட கூடாது என்பதற்காக அறிவிக்கைகளை வாபஸ் பெற இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறது மத்திய அரசு. 
 👇 வாபஸ் பெற்றதின் பின்னணியும் நோக்கமும்
 
✌ உச்ச நீதிமன்றத்தில் PETA ,AWBA வழக்கு தொடர்ந்த்தே 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் காளையை காட்சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அறிவிக்கையை காட்டிதான் தடை வாங்கியது.
 
✌ பிறகு 2014 ஆம் ஆண்டு மோடி அரசு வழக்கு விசாரணையில் இருப்பதால் காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்க முடியாததால் காளையை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்ற அறிவிக்கையை வெளியிட்டது. இருப்பினும் PETA ஜல்லிகட்டிற்கு தடை இருப்பதால் மத்திய அரசு இவ்வாறு அறிவிக்கைகளை கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்கிறது என்று கூறி அடுத்த நாளே தடை பெற்றது. அரசின் அறிவிக்கை முடக்கி வைக்க பட்டு உள்ளது.
 
✌ இதனிடையே தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றி இருக்கிறது  உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பும் தயாராக உள்ளது.
 
✌ தீர்ப்பு தயாராக இருப்பதால் 
தீர்ப்பு பாதகமாக வந்துவிட கூடாது என கருதி மத்திய அரசு இதை செய்து உள்ளது.
பொதுவாக நீதி மன்றத்தின் வேலை அரசு இயற்றும் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்குவது, இப்போது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருவது மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கைகளின் மேல், எனில் அந்த அறிவிக்கையை வாபஸ் வாங்கினால் அந்த வழக்கு நடத்த அவசியம் இருக்காது, அதற்காக தான் இன்று மத்திய அரசு அந்த அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதி வேண்டி மனுதாக்கல் செய்து உள்ளது… தமிழக அரசு புதிய சட்டம் கொண்டுவந்து விட்டதால் சட்ட சிக்கல் வராமல் இருக்கவும், சட்டத்தை மதிக்கும் வகையில் நீதிமன்றம் மனுவை ஏற்று அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதிக்கும். அதனால்  தீர்ப்புக்கும் கொடுக்கவும் சாத்தியம் இல்லை,வழக்கு நீர்த்து போகும்.
 
✌ மீண்டும் யாரவது தடை கேட்டு வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் சட்டத்தில் ஜல்லிகட்டிற்கு இடம் இருப்பதால் வழக்கு தள்ளுபடி ஆகும்.
 
✌ உடனே சில மேதாவிகள் இதை ஏன் முன்னாடியே மோடி செய்யவில்லை ,இப்போது தான் தெரியுமா என்று கேட்பார்கள் , பொதுவாக ஒரு வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது அது தொடர்பான அரசு அது தொடர்பான சட்டத்தில் , அறிவிக்கையில் பெரிய மாறுதல் செய்ய முடியாது.
அதனாலே தான் அரசு அந்த அறிவிக்கைகளை திரும்ப பெறவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தீர்ப்பு வரட்டும் எப்படி வந்தாலும் வேறு சட்டம் இயற்றி காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லிவந்தனர்.ஆனால் இப்போது தமிழக அரசு சட்டம் கொண்டுவந்ததால் உச்ச நீதிமன்றம் அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதிக்கும்.
 
*மத்திய அரசு இதை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, தீர்ப்பு சாதகமாக வந்தால் தாங்கள் தான் காரணம் என்றும் பாதகமாக வந்தால் நாங்கள் என்ன செய்வது , அரசு நீதிமன்றத்தின் செயல்பாடில் தலையிட முடியாது என்று ஒதுங்கி இருந்திருக்க முடியும் ஆனால் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றதும் என் பணி  உண்மையான மக்கள் பணி என்று புகழ் தேடாமல் உழைக்கும்பிரதமரின் செயல்பாட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இது*

One response to “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி”

  1. Anonymous says:

    Super

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.