உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்நடக்கவுள்ளது. இந்தத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்துடன் ஆளும் சமாஜ்வாதியும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றவெற்றியை போல, இந்த முறையும் வெற்றிபெறலாம் என்ற திட்டத்துடன் பாஜகவும் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல்களம் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து அண்மையில் கருத்து கணிப்பு நடத்தின. அதில் மொத்தம்உள்ள 403 தொகுதிகளில் பாஜக 202 இடங்களில் வெற்றிப்பெற்று (34 சதவீதம்) தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. காங்கிரஸுடன் கைகோர்த்து களம் இறங்கியுள்ள ஆளும் சமாஜ் வாதிக்கு இந்த முறை 147 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டும் என்றும். இந்த கூட்டணிக்கு 31 சதவீத அளவுக்கே வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இதேபோல் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி 24 சதவீத வாக்குகள்பெற்று வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்தக் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்துக்கு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிவாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் மத்தியில் அதிகஆதரவு காணப்படுகிறது. மொத்தம் 63.4 சதவீதம்பேர் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.