பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

பட்ஜெட்மூலம் தமிழகத்துக்கு தேவையான நல்லதிட்டங்களை கேட்பதற்காக கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் நான் டெல்லிக்கு வந்தேன். இதுதொடர்பாக சில மந்திரிகளை நான் பார்க்க இருக்கிறேன்.

ஜெயலலிதா மரணம் குறித்துவிசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அவரதுசாவில் தமிழக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டாக்டர்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குழப்பமானபதில்களே கிடைத்தன. இதனால் மக்கள் தெளிவுபெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

முதல்-அமைச்சர் என்ற முறையில்தான் ஓ.பன்னீர் செல்வத்துடன் பா.ஜனதாவுக்கு தொடர்புஇருக்கிறது. ஆட்சிக்கு ஆட்சி தொடர்பு இருக்கத்தான் செய்யும். கட்சிக்குகட்சி தொடர்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு உருக்குலைக்க வில்லை. இந்த குழப்பத்துக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருமுதல்-அமைச்சர், தான் மிரட்டப்பட்டதாக சொல்வதும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தன்னை பார்க்க அனுமதிக்க வில்லை என்று கூறுவதும் மிகுந்தவேதனைக்கு உரியதாக, கவலை அளிப்பதாக உள்ளது. இதை தெளிவுபடுத்தும்பொறுப்பு சசிகலாவுக்கு உள்ளது.

கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை. கவர்னர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்றைக்குகவர்னர் ஆகிறார்களோ அன்று முதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டு கவர்னர்களாகத்தான் செயல்படுகிறார்கள். வித்யாசாகர் ராவும் அப்படித்தான் செயல்படுகிறார். தமிழகத்தில் தெளிவான சூழ்நிலை இல்லாததால் கவர்னருக்கு காலஅவகாசம் தேவைப்படலாம். அதுமட்டுமல்ல, அவர் தமிழகத்துக்கும் கவர்னர்; மராட்டிய மாநிலத்துக்கும் கவர்னர். குழப்பத்துக்கு காரணம் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தானேதவிர, கவர்னர் அல்ல.

குழப்பமான இந்த சூழ்நிலையில் பா.ஜனதா தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.