தமிழக அரசியல் சூழலில் எந்நேரமும் திருப்பம் ஏற்படலாம் என்கிறநிலையில் திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக பாரதிய ஜனதாவும் பன்னீர் செல்வம் முதல்வராக நீடிப்பதே முறை என்கிற நிலைப் பாட்டில் உள்ளன. ஆனால், அண்மையில் செய்தித் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ''சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதே முறை என்றும், தமிழக பாரதிய ஜனதாவும் திராவிட கட்சிகள் போன்று தான் செயல்படு வதாகவும், திராவிடக்கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமை தமிழகத்தில் கால்ஊன்றினால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்'' என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை பதிலளித்து பேசுகையில், '' 'தமிழக பாரதிய ஜனதா தனது நிலைப்பாட்டை எடுக்க உரிமைஉள்ளது' என்று மத்தியில் அமித் ஷா கூறியுள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி, இப்படிப்பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், அவரது கருத்துக்குப்பதில் கூறி எங்களது நேரத்தை வீணடிக்க போவதில்லை. மேலும் நாங்கள் காங்கிரஸ் போன்று ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் இல்லை. தமிழக பாரதிய ஜனதா, 'பன்னீர்செல்வம்தான் முதல்வராக மீண்டும் வரவேண்டும்' என்கிற தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்கு பதவி ஆசை ஏற்பட்டிருக்காவிட்டால்… இந்தநிலைமை உருவாகி இருக்காது. தமிழக மக்களின் அமைதியான வாழ்வுதான் எங்களுக்கு முக்கியம். பன்னீர்செல்வமே முதல்வராக நீடித்திருந்தால் இப்படியான சூழல் உருவாகிஇருக்காது. அதனால் தான் நாங்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிக்கிறோம். மற்றபடி தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற சதித்திட்டம் தீட்டுகிறது என்பதெல்லாம் முற்றிலும் பொய்யானவாதம். தேர்தலில் நேரடியாக மோத விரும்புபவர்கள் நாங்கள். திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் கட்சியாக தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்த்துவருகிறோம். மத்திய நிர்வாகிகளுக்கும் இது நன்றாகவேதெரியும்” என்றார்.

''அப்படியென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்கு மத்தியத்தரப்பில் ஏதேனும் புகார் தெரிவிக்கப்படுமா'' என்றதற்கு, “அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை. எப்பவுமே இப்படித்தான் என்றால், புகார்கூறி என்னதான் செய்வது” .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.