உயர் ரூபாய் நோட்டு தடைசெய்துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதகபாதகம் குறித்த கருத்தரங்கம் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.   இதில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது:

 இந்தியா வளமான பொருளாதார கட்டமைப்புக்குள் வரவேண்டுமானால் கருப்புபணத்தை ஒழிக்க வேண்டும், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை தடுக்கவேண்டும், பலவழிகளில் முறைகேடாக சம்பாதித்து வீட்டில் மூட்டை மூட்டையாக அடுக்கிவைத்துள்ள ஊழல் பணம் வெளியில் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை பிரதமர் நரேந்திரமோடி உறுதியாக நம்பினார். அதற்காக சிலநாட்கள் நாட்டு மக்களுக்கு  உயர் கரன்சிநோட்டு ரத்து என்ற கசப்பான மருந்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதிகொடுத்தார்.   மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர, ஒட்டுமொத்த தேசம் கைகூப்பி ஏற்றுகொண்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் 24 மணிநேரத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியா மட்டுமில்லாமல், உலகில் பலநாடுகளை சேர்ந்தவர்கள் தைரியமாக தொழில்முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கேட்கும் சலுகைகள் தங்கு, தடையின்றி வழங்கப் படுகிறது. எந்த கோப்புகளும் கமிஷனுக்காக அதிகாரிகளின் மேஜையில் காத்திருப்பதில்லை. தொழில்வளர்ச்சி மட்டுமில்லாமல், தகவல், உயிரி தொழில்நுட்பம், உள்நாட்டு பாதுகாப்பு, பக்கத்து நாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றையும் சீராககவனித்து வருகிறார்.  மொத்தத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்தியாவை பொருளாதார ரீதியாக சர்வதேசளவில் வேகமாக வளர்ச்சியின் பாதையை நோக்கி பயணிக்கசெய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.