காட்டு தீயில் கருகிய  19 தீயணைப்பு வீரர்கள் கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரிசோனா காட்டு பகுதியில் தீப்பிடித்துக் கொண்டது. அந்த தீயை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சிபெற்ற தீயணைப்பு வீரர்கள் களத்தில் குதித்தனர் . மிக வேகமாக பரவிய அந்த காடு தீ சுமார் 2000 ஏக்கர்காடுகளை நாசமாக்கியது. இந்நிலையில் தீயை அணைக்கச்சென்ற தீயணைப்பு வீரர்கள் 19 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டார்கள்.

முன்னதாக அரிசோனா காட்டுப் பகுதியில் மின்னல் தாக்கியதால், இந்த காட்டுத்தீ பிடித்து மிக வேகமாக பரவியது . தீயை கட்டுப்படுத்த தீவிரமுயற்சி மேற்கொண்டனர். ஆனால், கடுமையான வெப்பம், வேகமாக வீசியகாற்று ஆகியவற்றால், தீ மளமள நகரங்களுக்கும் பரவி, 500-க்கும் அதிகமானோர் வீடுகளை நாசமாக்கியது.

இதற்கிடையில் யார்னெல் ஹில் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் 19 வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரெனபரவிய தீயில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். வெளியேறமுடியாமல் தவித்த அவர்கள் 19 பேரும் தீக்கிரையாகினர்.

Leave a Reply