நீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரின் கங்கை ஆற்றங் கரையில் பரமார்த்த நிகேதனில் சர்வதேச யோகாதிருவிழா ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழாவில் பேசிய தாவது: யோகா என்பது ஒரு உடற் பயிற்சி மட்டும் அல்ல. அது மனம், ஆன்மீகம், மற்றும் உடல்ரீதியில் அமைதியை தேடும் ஒரு வழி. யோகா மனிதர்களை இயற்கையுடன் நெருங்க வைக்கிறது. இது மனிதனின் உடல் மற்றும் மனத்தை ஒழுக்க த்துடன் வைக்கிறது. யோகாவை நான் தொடர்ந்து செய்கிறேன். இது எனக்கு உயர்ந்த உணர்வை தருகிறது. இது என்னையும் உங்களையும் இணைக்கும் கருவியாக செயல்படுகிறது.

உலகநாடுகளுக்கு தீவிரவாதமும் பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள நிலையில் யோகாதான் நீடித்த அமைதிக்கு வழிகாட்டுகிறது. யோகா என்பது நம்மை ஒருவராக காட்டும்முயற்சி. அது என்னுடையது என்பதில் இருந்து நம்முடையது என்ற நிலைக்கு மாற்றுகிறது. அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் மனித ஆன்மாவை அளவிடுவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஜெர்மனியைசேர்ந்த அறிஞர் மேக்ஸ் முல்லர் இந்தியா மிகவளர்ச்சி அடைந்த மனதை கொண்டவர்களை உடையநாடு என்றும் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வழிமுறை அங்கு இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே எவ்வாறு ஒழுக்கமாகவாழ்வது என்பதை உலக நாடுகளுக்கு யோகா பறைசாற்றுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.