பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட வில்லை என உலகவங்கியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில், கருப்புப் பணப் புழக்கம், கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவிகிடைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று, ரூ.500, ரூ.1000 நோட்டுகள்செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த செல்லாத ரூபாய்நோட்டுகள், கடும் கண்காணிப்புகளின் கீழ் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி நிறுவனங்கள் வழியாக திரும்பப்பெறப்பட்டன.

எனினும், மத்திய அரசின் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளதாகவும், தேவையற்ற சீர்திருத்த நடவடிக்கை இது எனவும் எதிர்க் கட்சிகள் பலவும் காட்டமாக விமர்சித்தன.

இந்நிலையில், இந்திய அரசு செயல் படுத்தியுள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்பார்த்த பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளதாக, உலகவங்கியின் தலைமைச் செயலர் கிறிஸ்டலினனா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளளார்.

இதுதொடர்பாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி இதரநாடுகள் படித்தறிய வேண்டியுள்ளது. இங்கே குறுகிய காலத்தில் மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கை ஒன்று செயல்படுத்தப் பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம் காரணமாக, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறியுள்ளதுடன், கருப்புப் பணப்புழக்கமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்திய அளவில் திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு, நாட்டு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல், புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் வரை மக்கள் அமைதி காத்தனர். இதனை நாம் பாராட்ட வேண்டும்.

குறுகிய கால நோக்கில் பார்க்கும்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அவசியமற்றதாக தோன்றும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் பார்த்தோம் எனில், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை எட்ட இந்த பணமதிப்பு நீக்கம் உதவும். இந்தநடவடிக்கை இந்தியப் பொருளா தாரத்தில் பெரியபாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இவ்வாறு உலக வங்கி தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.