உ.பி. சட்ட சபைத் தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் அக்யூதாத் நவீத் என்ற சிறுமி வசித்து வருகிறார். 11 வயதான அந்தசிறுமி லாகூரில் கத்தீட்ரல் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச சட்ட சபைத் தேர்தல் வெற்றி பெற்றதற்காக, 2 பக்கம்கொண்ட வாழ்த்துக் கடிதத்தை கடந்த 13ம் தேதி எழுதியிருக்கிறார். இந்தகடிதம் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, அக்யூதாத் நவீத் கடிதத்தில் கூறியதாவது: சிறுவயது முதலே எனது தந்தை உலக அமைதியின் முக்கியத்துவத்தை எனக்கு சொல்லிகொடுத்து வளர்த்துள்ளார்.
 
உ.பி தேர்தல் வெற்றியின் மூலம் இந்தியமக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள். அதேபோல் இரு நாட்டிலும் அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் இதயங்களை வெல்லமுடியும்  துப்பாக்கிகள் வாங்குவதற்கு பதிலாக நாம் புத்தகங்கள் வாங்கவேண்டும். அதேபோல் தோட்டாக்கள் வாங்குவதற்கு பதிலாக ஏழைமக்களுக்கு மருந்துகளை நாம் வாங்கவேண்டும். இரண்டு நாடுகளுக்கும் நல்லுறவை வளர்க்கும் ஒரு சிறந்தபாலமாக மோடி திகழவேண்டும் எனவும் அச்சிறுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன் என்று தெரிவித்தார். பிரதமர்க்கு பாகிஸ்தான் சிறுமி எழுதியகடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.