ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே மாணவர்களிடையே வெறுப்பு விதைக்கப்படுகிறது, அவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று கூறினோம். பலருக்குப் புரிந்தது, சிலருக்குப் புரியவில்லை. சிலர் புரியவே முயற்சிக்காமல் சமூக விரோதிகளுக்கு ஆதரவளித்தனர்.

நெடுவாசலிலும் கூட உரிய பிரச்சினை அலசப்பட்டதை விட " மோடி அரசு கேடி அரசு " என்பதாகத்தான் போராட்டத்தை கையில் எடுத்தவர்களின் பிரச்சாரம் இருந்தது. மாணவர் என்ற போர்வையில், ஊர்மக்கள் என்ற போர்வையில், சமூக ஆர்வலர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொண்ட " அமைப்பாளர்களின் " நோக்கம் எல்லாம் மோடி அரசின் மீது வெறுப்பு விதைப்பதில் தான் இருந்ததே தவிர பிரச்சினையைப் பேசுவதில் இல்லை. போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட திட்டமிட்டபடி வெறுப்பு விதைக்கப்பட்டுவிட்டது.

தங்கச்சிமடத்தில் பிரிட்டோ குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொள்ள சம்பதித்த போதும் போரட்டத்தை வாபஸ் வாங்குவதை எதிர்த்தவர்கள் சிலர் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தான். மூன்று போராட்டத்திலும் கலந்து கொண்ட சிலரது புகைப்படங்கள் NIA விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப்போராட்டங்களில் படிக்க வேண்டிய தருணத்தில் உள்ள மாணவர்களை " இதுதான் விழிப்புணர்வு " என்று உணர்வுகளைத் தூண்டிவிட்ட மைனாரிட்டி கல்லூரி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் முக்கியப் பங்கறாற்றினர். நேற்றுவரை என்னய்யா செய்தீர்கள் என்று கேட்டால் " இப்போழுதாவது மாணவர்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளதே, ஊக்கமளியுங்கள் " என்று பாதகப் பிரச்சாரத்தில் அறியாமல் விழுந்த ஆசிரியர்கள் கூறியதுண்டு.

விளைவு

சேலத்தில் இன்று மத்திய அமைச்சர் திரு. பொன்னார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பை வீசியவர் ஒரு மாணவர். பெயர் சாலமன். திருவள்ளூரைச் சேர்ந்தவர். இந்திய மக்கள் முன்னணி என்ற நக்ஸல் அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்.


சேலத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ இல்லை. துரதிருஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஒருவனின் இறுதிச் சடங்கு. அங்கு சென்று அஞ்சலி செலுத்தினால் சரி. ஆனால் மத்திய அமைச்சர் மீது செருப்பை வீசினால்…! நோக்கமே அஞ்சலி அல்ல, வெறுப்பை உமிழத்தான் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்து மதத்தில் இருந்து மதம் மாறிப்போன சாலமன் விஷம் விதைக்கிறார் என்றால் அவருக்குள் அந்த விஷத்தை விதைத்தது யார் ?

க்ருசேடர்களும், நக்ஸல்களும் ஜிகாதிகளும் தானே ! அவர்களுக்குத் துணை போன எதிர்க்கட்சிகள் தானே..! பாஜக மீதான விருப்பமின்மையால் ஏதோ நடந்து விட்டுப் போகட்டுமே என்று வேடிக்கை பார்த்த நடுநிலைவாதிகளும் தானே..!

மத்திய அமைச்சர்  திரு பொன் ராதாகிருஷ்ணன் தமிழக மீனவர் பிரச்சினைக்கும் ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டவர். நெடுவாசல் மக்களுக்கும் தங்கச்சிமடம் இராமேஸ்வரம் மக்களுக்கும் உரிய தீர்வு கிடைக்க பேச்சு வார்த்தை நடத்தி போராட்டங்களை விலக்கிக் கொள்ளச் செய்தவர். இதனால் தோல்வி அடைந்த பிரதானக் கட்சி அல்லாத சமூக விரோதக் கும்பல்களால் அவர் மீதான கோபத்தை அடக்க முடியவில்லை. கோபம் என்ற இயலாமை வெறுப்பாக மாறி செருப்பை கழற்றி எறிய வைத்துள்ளது.

நம் மாணவர்கள் திசை திருப்பப் பட்டுள்ளார்கள், யாருடைய தோல்விக்கோ யார் மீதோ பழி போட்டு வெறுப்பு ஏற்றப்பட்டுள்ளார்கள் என்பதை இனியும் நம் பொதுமக்களும், பாஜக எதிர்கருத்து நாகரிகவாதிகளும் புரிந்து கொள்வது நல்லது.

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீதான செருப்பு வீச்சை ஒவ்வொரு தமிழனும் கட்சிமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு கண்டிக்க வேண்டும். அப்போது தான் நாம் நாகரிக அரசியல் நடத்த முடியும்.

எனவே, நடந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இது போன்ற நக்ஸல் இயக்கங்களை முளையிலேயே தடை செய்து கிள்ளி எறிய வேண்டும் என தமிழக அரசு நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள்…?

நன்றி நம்பி நாராயணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.