*அமைச்சர் பொன்னார் மீது செருப்பெறிந்த கயவர்களை* *பொரிந்து வாட்டி எடுத்த #மாணவர்__முத்துகிருஷ்ணன்_தந்தை* முத்துகிருஷ்ணனின் தந்தை கடும் கோபம் அடைந்தார். 

 

*என் மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை அவமரியாதை செய்வதற்கு நீங்கள் யார்?**என் மகனின் உடல் டெல்லியில் இருந்தபோது ஒருவனாவது வந்தீர்களா?*  *என் மகனின் உடலை வைத்து அரசியல் செய்வதற்கு உங்களுக்கு எந்த யோக்யதையும் இல்லை என்று பொரிந்து தள்ளிவிட்டார்*

 

*மத்திய அமைச்சர் செய்த உதவிகள் என்னவென்றாவது தெரியுமா?* *அவரின் உதவி இல்லாமல் உடலை இங்கு கொண்டுவந்திருக்க முடியுமா?* *நீங்களோ உங்கள் அமைப்புகளோ, கட்சிகளோ ஏதாவது ஒரு சிறு உதவியாவது செய்தீர்களா?*என்று கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை விரட்டினார். 

 

தமிழக மாணவர்  முத்துகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமை இரவு அவருடைய நண்பர்கள் அறையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த துயரச் செய்தியை கேள்விப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் உடனடியாக டெல்லி சென்று துக்கம் விசாரித்ததோடு நின்றுவிடாமல் 

 

மாணவனின் பெற்றோரையும், அவரது உறவினர்களையும் டெல்லியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு முத்துகிருஷ்ணனின் மரணத்திற்கான காரணத்தையும் விசாரித்தார். முத்துகிருஷ்ணனுக்கு டெல்லியில் காப்பாளராக இருக்கும் பேரா.சுகுமார் அவர்களையும் நேரில் சந்தித்து பிற விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். 

 

*அவர் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்ப முயற்சி எடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.* இதனிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்திருக்கிற முத்துகிருஷ்ணனின் சம்பவத்தை *உடனடியாக விசாரிக்க பல்வேறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்*

 

டெல்லியில் போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவரது *உடல் பெற்றோரின் கைகளுக்கு வரும்வரை உடனிருந்து பல்வேறு உதவிகளை செய்தார்* மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள். மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் உடனடியாக சென்று விசாரித்தார். அப்போதுவரை எப்ஐஆர் போடவில்லை. 

 

*உடனடியாக டெல்லி காவல்துறை எப்ஐஆரை போட வேண்டும் என்று வலியுறுத்தினார்*. அதை மீடியா வாயிலாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் *இந்த மரணத்தை எஸ்ஸி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் பதிந்து விசாரணையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று முத்துகிருஷ்ணன் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க அதையும் வலியுறுத்தினார்* நிர்மலா சீதாராமன் அவர்கள். 

 

மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு உரிய விசாரணையும் நீதியும் கிடைக்க மத்திய அரசோடு பேசுவோம் என்றும் வாக்குறுதி அளித்தனர். இவர்களின் அழுத்தத்தின் காரணமாகவே விசாரணை ஆரம்பித்திருக்கிறது. 

 

இதோடு மட்டும் நின்றுவிடாமல் *முத்துகிருஷ்ணனின் உடல் டெல்லியிருந்து சென்னை வர விமானத்திற்கு ஏற்பாடு செய்து முத்துகிருஷ்ணன் உடலுடன் கூடவே வந்தார் பொன்.இராதாகிருஷ்ணன்*. இவை எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்த்து *நெகிழ்ந்து போனார் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம்* 

 

சென்னை விமான நிலையத்தில் வந்தவுடன் அப்போது அங்கிருந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில குழுக்கள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிசவாதிகள் – 20 அல்லது 25பேர் இருப்பார்கள்) அமைச்சரை எதிர்த்தும் பிஜேபி அரசை எதிர்த்தும் குரல் எழுப்பினர். *முத்துகிருஷ்ணனின் தந்தை அப்போதே அவர்கள்மீது எரிச்சல் அடைந்து ஆவேசமானார்*

 

 *உங்களுக்கு அமைச்சரைப் பற்றி என்ன தெரியும்? என் மகனின் உடலை வைத்து நீங்கள் அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் என்று கோபமாகவே எரிந்து விழுந்தார்*. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழுக்கள் தங்களின் அரசியல் பிழைப்பு இங்கு எடுபடாது என்பதை புரிந்துகொண்டு ஓட்டம் பிடித்தனர். 

 

சென்னையிலிருந்து நேராக முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதும் பொன்.இராதாகிருஷ்ணன் அந்த உடலுடன் சேலத்திற்கு பயணமானார்.  கடைசியாக இன்று முத்துகிருஷ்ணனின் உடலுக்கு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் அஞ்சலி செலுத்தி மாலையை முத்துகிருஷ்ணனின் பாதத்தில் வைத்தார். 

 

*முத்துகிருஷ்ணனின் தந்தை அந்த ஒரு மாலையை மட்டும் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அணிவித்தார்*. என் மகனின் உடல் இங்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அது இவரால்தான் என்று உள்ளம் நெகிழ்ந்து அங்கிருப்போரிடம் கூறினார்.  இதனிடையே சென்னையில் அசிங்கப்பட்ட அந்த கம்யுனிச நக்சலைட் தமிழ் பிரிவினைவாத குழுக்கள் இங்கேயும் ஒரு திட்டம் போட்டு மாலை அணிவித்து விட்டு வந்த

 பொன்.இராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசினர்.  *மத்திய அமைச்சர் பெருந்தன்மையாக அதை விட்டுவிட சொல்லிவிட்டார்*.  ஆனால் முத்துகிருஷ்ணனின் தந்தை  ஆவேசமடைந்தார் மத்திய இணை அமைச்சர் அவர்கள் செருப்பு வீசிய நபரை கைதுசெய்ய வேண்டாம், வழக்கு போட வேண்டாம். இவர் உண்மை தெரியாமல் யாரோ சொல்லிக் கொடுத்ததை செய்திருக்கிறார். விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

 

தன்னுடைய தமிழ் சகோதரன் ஒருவன் டெல்லியில் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு நெஞ்சம் பதைபதைத்து தன் சொந்த சகோதரன் இறந்துவிட்டால் எப்படி ஒரு அண்ணன் கூடவே இருந்து பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லி கடைசி வரை இறந்த உடலோடு இருப்பாரோ அதுபோலவே இருந்த மத்திய இணை அமைச்சரை 

 

அரசியல் பிழைப்புக்காக ஒருவன் செருப்பு வீசி இருக்கிறான்   *சாலமன் என்கிற கம்யூனிச நக்சலைட் புரோக்கர்*

Leave a Reply