உத்தரப் பிரதேசத்தில் பாகுபாடின்றி அனைத்துபிரிவினரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் உறுதியளித்தார்.


லக்னெளவில், மாநில முதல்வராக ஞாயிற்றுக் கிழமை பதவியேற்று கொண்டபிறகு செய்தியாளர்களுக்கு முதன்முதலாக பேட்டியளித்தவர், இதைத்தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:


கடந்த 15 ஆண்டுகளில், முந்தைய அரசுகள் ஊழல்களில் ஈடுபட்டதாலும், தங்களுக்கு நெருக்கமான வர்களுக்குச் சலுகைகள் காட்டியதாலும், இந்தமாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி விட்டது. சட்டம்-ஒழுங்கை காக்கத்தவறியதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.


இந்நிலையில், அனைத்து பிரிவினரு க்குமான வளர்ச்சி என்ற நோக்கத்துடன் மாநிலஅரசு பாடுபடும். மாநிலத்தில் சமச் சீரான வளர்ச்சியை நாங்கள் உறுதிசெய்வோம். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, பெண் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

அதை தொடர்ந்து, மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்களது வருமானம், சொத்துவிவரங்களை 15 நாள்களில் தெரிவிக்க வேண்டும் என்று யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.


ஊழலை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக, முதல்வராக பதவியேற்றபிறகு அமைச்சர்களுடனான முதல் அறிமுகக் கூட்டத்திலேயே யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவைபிறபித்தார். இதுதொடர்பாக, அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:


ஊழலை வேரறுப்பதே பாஜகவின் முக்கியநோக்கமாகும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தங்களது வருமானம், அசையும் மற்றும் அசையாசொத்து விவரங்கள் ஆகியவற்றை 15 நாள்களில் கட்சித் தலைமையிடமும், முதல்வருக்கான செயலரிடமும் அளிக்கவேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
இது தவிர, பிறரது உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார் என்று ஸ்ரீகாந்த் சர்மா கூறினார்.


விழாக்கோலம் பூண்ட கிராமம்: இதனிடையே, யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து, அவரது சொந்தஊரான உத்தரகண்ட் மாநிலம், பவூரி மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் பெற்றோரான ஆனந்த்சிங் விஷ்ட்-சாவித்ரி தம்பதிக்கு உறவினர்களும், நண்பர்களும் வீட்டுக்குவந்தும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.