உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக. அமோகவெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். அனைத்துமந்திரிகள் மற்றும் அதிகாரிகள் 15 நாளில் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ள ஆதித்ய நாத், சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, ஆதித்ய நாத் பதவியேற்ற சிலமணி நேரங்களில், அதாவது நேற்று இரவு இரண்டு இறைச்சிவெட்டும் கூடங்களுக்கு அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக, தேசியபசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் பேரில், அலகாபாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு இறைச்சி வெட்டும் கூடங்கள் மூடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒரு வர் தெரிவிக்கிறார். இதே போல் மற்றொரு இறைச்சிவெட்டும் கூடத்தை மூடவும் பசுமைதீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அது சட்ட விரோதமாக செயல்பட்டதாக புகார்கள் எதுவும் வராததால் மூடப் படவில்லை. எனினும், அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத இறைச்சி கூடங்களை மூடப்படும் என்றும் இயந்திரமயமான இறைச்சிக் கூடங்கள்தடை செய்யப்படும் என்றும் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.