பிரதமர் நரேந்திரமோடி 104 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலில்விழுந்து வணங்கினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றே பிரதமர் நரேந்திரமோடியும் மூதாட்டி ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார். வாய்பாய் பிரதமராக இருந்தபோது, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப் பிள்ளை எனும் மூதாட்டியின் கால்களைதொட்டு வணங்கினார். கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் சின்னப்பிள்ளை. அவருடைய சாதனையை பாராட்டி விருதுவழங்கிய வாஜ்பாய், அவரது காலில் விழுந்து வணங்கினார்.

சமீபத்தில் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு பாராட்டுவிழா ராய்பூரில் நடைபெற்றது. அதில் தனது ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டி குன்வர்பாய் என்பவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply