நீதி மன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நீதித் துறைக்கு மத்திய அரசு உதவிசெய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலான கொண்டாட்டவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்குகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் பேசியபோது, அவரது வார்த்தையில் வேதனை வெளிப்பட்டதை உணர்ந்தேன். நீதித் துறையின் சுமையை குறைப்பதற்கும், தேக்கமடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.


சட்டம்தொடர்பான பிரம்மையை போக்கும்வகையில், 1200 பழைய சட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. அது போல், நீதித்துறையை நவீனப் படுத்தி, நீதித் துறைக்கு மத்திய அரசு உதவிசெய்துள்ளது. நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதியதிட்டங்கள் கொண்டு வருவதற்கான பணியில் மக்கள் ஈடுபடவேண்டும்.
நீதிமன்றங்களின் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், அங்கு தொழில் நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அதன்தரத்தை மாற்றவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் மேற்கொண்ட பணிகள் பாராட்டக்கூடியவை ஆகும்.


நீதிமன்றங்களில் விசாரணை கைதிகள், சாட்சிகள், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவுசெய்வதற்கு வழக்கமான முறையை பின்பற்றினால் காலவிரயமே ஏற்படும். இதற்குப்பதிலாக விடியோ கான்பரன்சிங் முறை பின்பற்றப்பட்டால், காலவிரயத்தையும், பண விரயத்தையும் தடுக்கமுடியும்.


வரும் 2022-ஆம் ஆண்டோடு, நமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இந்த ஆண்டை நமது நாட்டை புதியஉச்சத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆண்டாக நிர்ணயித்து நீதித்துறையும், அரசும், பொது மக்களும் செயல்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.