பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் – பால்டிஸ் தான் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை என்று மத்திய அரசு மீண்டும் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.கில்கித் – பால்டிஸ்தானை பாகிஸ்தானின் புதியமாகாணமாக அந்நாடு அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தவிளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது கில்கித் – பால்டிஸ்தான்.
1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது. சுமார் 72,971 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்தப்பகுதியில், 19 லட்சம் பேர் வசிப்பதாக 2008-ஆம் ஆண்டு மக்கள் தொகைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


7 மாவட்டங்கள், 33 பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதி, இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், அந்தப்பகுதியை 5-ஆவது மாகாணமாக பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது.இந்தவிவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது. பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த உறுப்பினர் பாரத்ருஹரி மஹதாப் இது தொடர்பாக அவையில் பேசியதாவது: கில்கித் – பால்டிஸ்தானை புதியமாகாணமாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு இந்தியா ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? மேலை நாடுகள்கூட இந்தவிஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்புகின்றன. கடந்தகால வரலாற்றை மத்திய அரசு மறந்துவிடக்கூடாது என்றார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
கில்கித் – பால்டிஸ்தான் தொடர்பாக பாகிஸ்தான் அரசு புதியஅறிவிப்பை வெளியிட்ட நாள்முதலே அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் – பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.


இந்த பகுதிகளை மீட்பதற்காக பாஜக நிறுவனர் ஷியாம்பிரசாத் முகர்ஜி, தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். எனவே, அந்தப் பகுதிகளை பாகிஸ்தானுக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது போலக்கூறப்படும் விமர்சனங்கள் தவறானவை என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.