தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர  ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் வருங்கால திட்டங்கள் குறித்து வகுக்கப் படுகிறது. மாநிலங்களில் பாஜக வளர்ச்சி பற்றி ஆய்வுசெய்ய அமித் ஷா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தமிழகத்துக்கு அடுத்த மாதம் வருகிறார்.

வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கான அனைத்து ஆயத்தபணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மக்களின் ஆதரவைபெற்று தமிழகத்தில் வெற்றிபெறுவோம். தமிழகத்தில் பாரதீய ஜனதா நிச்சயமாக காலூன்றும்.

தி.மு.க. நடத்தும் அனைத்துகட்சி கூட்டத்துக்கான அழைப்பை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க.வுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

விவசாயிகள் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்றால் தமிழகத்தில் அதிகநாட்கள் ஆண்ட தி.மு.க.வும் இதற்கு காரணம். தொலைநோக்கு திட்டம், நீர்மேலாண்மை திட்டம், தென்னக நதிகளை இணைப்பதற்கான திட்டம் போன்றவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. நதிகள், ஆறுகளை தூர்வாரவில்லை. குளம், குட்டைகளை பேணி பாதுகாக்க வில்லை.

இவர்கள் தரும் ஆலோசனைகளைவிட பிரதமர் மோடி, பயிர்பாதுகாப்பு போன்ற நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். உத்தர பிரதேசத்தில் ரூ.36 ஆயிரம் கோடி விவசாயகடனை அந்த மாநில அரசு ரத்து செய்து உள்ளது. அதேபோல் தமிழக அரசும் ரத்துசெய்ய வேண்டும்.

தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கிவிட்டனர். டெல்லியில் போராடும் தமிழகவிவசாயிகள், மாநில அரசிடம் கோரிக்கை வைக்க மறுப்பது ஏன்?. தமிழகவிவசாயிகள் பிரதமரின் திட்டங்களை பாராட்டுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.