அப்பட்டமான சுயநலத்தின் காரணமாக இன்று தனது அரசியல் களத்தை பலப்படுத்தவும், கூட்டணிக்கு  அச்சாரமாகவும் ஒரு கடை அடைப்பு போராட்டத்தை திமுக கட்சி நடத்தி இருக்கிறது, பல இடங்களில் நேற்றில் இருந்தே இன்று காலையில் கடைகளை திறக்க கூடாது என்று வணிக நிறுவனங்கள் மிரட்டப்பட்டன இருந்தாலும் மக்களின் மனப்பூர்வமான ஆதரவு இல்லாததால் இயல்பு வாழ்கை வாகன போக்குவரத்துடன் பெரும்பாலான இடங்களில் நடைபெற்றது. திருப்பூரில் மட்டும் கட்டாயமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் வரை இழப்பு. நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் ஒரு நாள் இழப்பை இழந்து இருக்கிறார்கள், இதன் மூலம் கிடைத்த பலன் என்ன? விவாசியிகளுக்கு ஆதரவு என்கிறீர்களே மறுபடியும் சகோதரர் ஸ்டாலின் அவர்களை கேட்கிறேன் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ்யை கர்நாடகாவில் காவேரியில் தண்ணீர் திறந்து விட ஏன் சொல்லவில்லை,

அதுதானே உண்மையில்  உடனடி தீர்வு, அப்படியென்றால் உங்களுக்கு விவசாயி நலன் என்ற பெயரில் உங்கள் கூட்டணி பலம் பெற வேண்டும் என்பதிற்க்காக தான் இந்த போராட்டம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகள் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்தியில் உங்கள் சகோதரர் அழகிரி உர துறை அமைச்சராக இருந்த காலத்தில் விவசாயிகள் உரம் கிடைக்காமல் திண்டாடினார்கள், உரம் பதுக்கப்பட்டது, பல உர தொழிற்சாலைகள் மூடப்பட்டன அவற்றை மீண்டும் திறந்த மோடி அரசு வேம்பு தடவிய யூரியா குறைந்த விலையில் எளிதில் உரம் கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது காவேரி பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க என்ன முயற்சிகள் எடுத்தீர்கள்? ஆட்சியில் இருக்கும்பொழுது விவசாயிகளை வஞ்சித்த திமுக இன்று விவசாயிகளுக்காக போராடுகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் வேலை. பக்கத்து மாநிலம் கேரளா அரசு சிறுவாணியில் அணை கட்ட முயன்றபோது அதை

 

 

தடுத்தது மத்திய அரசு. கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட்களை இதில் கண்டிக்காத நம் உள்ளூர் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் விவசாயிகளுக்கு கவலைப்படுகிறோம் என்ற போர்வையில் வருங்கால கூட்டணிக்கு அலைந்து கொண்டிருப்பதால் இன்று கடை அடைப்பில் சுயநலத்துடன் கலந்துகொண்டார்கள் என்பதுதான் உண்மை.

திரைப்பட துறை முழு ஆதரவு என்கிறார்கள். கடந்த காலத்தில் திரு. ஸ்டாலின் அவர்களின் குடும்ப ஆதிக்கத்தால் திரைப்பட துறை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர் ஆகவே அவர் அவர் சுயநல நோக்கத்துடன் சாமான்ய மக்களின் பொருளாதாரத்தை இழப்புக்கு உண்டாக்கி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்பதே உண்மை.

தமிழக பா.ஜ.க பொறுத்தமட்டில் விவசாயிகளின் வாழ்வு உயர வேண்டும் அதை நோக்கியே எங்களது நடவடிக்கைகள் தொடரும், தொலைநோக்கு பார்வையுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த எங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் இருக்கும், ஆக்க பூர்வமான பயிர் பாதுகாப்பு காப்பீடு போன்ற தொலைநோக்கு திட்டங்கள், நீர் நிலை மேலாண்மை, நதிகள் இணைப்பு போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடரும்.

இது வெறும் வெற்று போராட்டம் தானே தவிர வெற்றி போராட்டம் அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இன்றைய போராட்டத்தை மாற்ற நினைத்த எதிர்க்கட்சிகளின் சதி திட்டத்தை முறியடித்த தமிழக காவல் துறைக்கு பாராட்டுக்கள்.

 

என்றும் மக்கள் பணியில்

 (Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.