காவிரிப்பிரச்சனை 120 ஆண்டுகால பிரச்சனை! பாஜக 120 ஆண்டுகாலமாக இந்தியாவை ஆண்டுக்கொண்டிருக்கவில்லை! ”காவிரி மேலான்மை ஆணையம் அமைப்பது குறித்த வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் நிலுவையில் இருக்கும்போது, திறந்து விடப்படவேண்டிய நீரின் அளவை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட இரண்டு நீதிபதியை கொண்ட பெஞ்ச் 4 நாளில் காவிரி மேலான்மை ஆணையம் அமையுங்கள் என உத்தரவிட்டது சரியானதல்ல” என அதே நீதிமன்றத்தில் மத்திய அரசு சுட்டிக்காட்டியதை நீதிபதிகள் ஒத்துக்கொண்டநிலையில், ”ஏன் அமைக்கவில்லை?” ”ஏன் அமைக்கவில்லை?” என கேட்பது முட்டாள்தனம்!

     ஆணையம் அமைப்பதென்றால் ஆணைய உறுப்பினர்களை தமிழகமும் தரவேண்டும், கர்நாடகமும் தரவேண்டும், பாண்டிச்சேரியும் தரவேண்டும், இதே நீதிமன்றம் உத்தரவிட்டும் நீர் திறந்துவிடாத கர்நாடகம் இப்போதுமட்டும் ஆணையம் அமைக்க அதற்கான ஆணைய பிரதிநிதிகளை பரிந்துரைப்பார்களா என்ன? அவர்கள் பரிந்துரைக்கவில்லை என்றால் எந்த சட்டத்தின்கீழ் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்? ”நீதிமன்ற உத்தரவு”- சட்டம் ஆகாதே! சட்டப்படி தீர்ப்பு வழங்குவதுதான் நீதிமன்றம்! சட்டத்தை இயற்றுவது நீதிமன்றமல்ல! சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படவேண்டும்! நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் ஏற்றுக்கொண்டால் சட்டம் தேவையில்லை! ஏற்றுக்கொள்ள மறுத்தால் நிர்ப்பந்தப்படுத்தி கர்நாடகம் ஏற்றுக்கொள்ளுமாறு செய்யவேண்டுமானால் அதற்கான சட்ட அதிகாரம் மத்திய அரசுக்கு வேண்டும்!

     சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படவேண்டும்! பஞ்சாப் மறு சீரமைப்பு சட்டத்தின்படித்தான் பக்ரா பியாஸ் நதிநீர் பங்கீட்டு ஆணையம் பஞ்சாப்பில் அமைக்கப்பட்டது! ஆந்திரா மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ்தான் கிருஷ்னா மற்றும் கோதாவரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது! காவிரி நதிநீர் பங்கீட்டு சட்டம் என ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்தான், அந்த சட்டத்தின் அடிப்படையில் ஆணையம் அமைக்கமுடியும்! சட்டத்தின் அடிப்படையில் ஆணையம் அமைத்தால்தான் சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்! இந்த விளக்கம் நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சரால் தரப்பட்டுள்ளது! சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!

     அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் திமுக உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு சட்ட மசோதாவை தாக்கல் செய்தால் அதை நிறைவேற்றும் வகையில் பாஜக செயல்படும்! சட்டம் தேவை என்னும் உண்மையை எடுத்துசொல்லி காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நெருங்கியிருக்கிறது பாஜக! காவிரிப் பிரச்சினையில் அரசியல் பிழைப்பு நடத்துவோர் முதலில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வார்களா? அவர்கள் அதை செய்யமாட்டார்கள், பாஜக வைத்தவிற வேறு எந்த அரசியல் கட்சிக்கும் விவசாயிகள் மீது அக்கரை இல்லை என்பது மக்களுக்கு தெரியும்! ராஜியசபாவில் பெரும்பான்மையை பாஜக எட்டிய உடன் சட்டம் இயற்றப்படும்! இந்திய விவசாயிகள் என்றும் பாஜக பக்கமே!

–     

நன்றி-    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.