நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற மத்தியஅரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற, தன்னார்வத் தொண்டுநிறுவனமான பாரத சேவாசிரம சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய மோடி கூறியதாவது:
வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் சாலை, தேசியநெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.40,000 கோடியை முதலீடுசெய்துள்ளது.


நாட்டின் வட கிழக்குப் பகுதியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயிலாக மாற்றவேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. ஆனால், தேசியளவில் இந்தியாவின் தூய்மையான நகரங்களில் வடகிழக்கில் இருந்து காங்டாக் நகரம் மட்டுமே முதல் 100 இடத்துக்குள் வந்துள்ளது. 4 வடகிழக்கு நகரங்கள் 100 முதல் 200 இடங்களில் உள்ளன. இதிலும் ஷில்லாங் நகரம் 276-ஆவது இடத்தை பிடித்துள்ளது.


வடகிழக்குப் பிராந்தியத்தில் துய்மையை பாதுகாப்பது என்பது அங்குவசிக்கும் ஒவ்வொருவருக்குமான சவாலாகும். நுழைவுவாயில் தூய்மையாக இல்லாவிட்டால், நமது நோக்கம் நிறைவேறாது. பாரதசேவாசிரம சங்கம் உள்பட அனைத்து அமைப்புகளும் நகரங்களில் தூய்மையைப்பேணுவதில் கைகோத்து செயல்பட வேண்டும்.நாடு சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப்பிறகும் வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படவில்லை.


வடகிழக்கில் சிறப்பான போக்குவரத்துவசதியை ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப் பட்டுவிட்டன. இது தவிர சிறிய விமானங்கள் பலவும் அமைக்கப்படவுள்ளன என்று மோடி பேசினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.