2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் காப்பியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடு மற்றும் ஆபரண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்; மாணவியர் ஆபரணங்கள் அணியக் கூடாது என நீதிமன்ற அறிவுறுத்தல் இருந்தது,,

மாணவர்களுக்கு கொடுக்கப்பட வழி முறைகளை அவர்களும் அவர்கள் பெற்றோர்களும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அந்த மாணவன் படிக்கவே லாயக்கில்லாதவன் என்று பொருள். முழுக்கை சடடை கூடாது என்று சொன்ன பின்னும் வந்தால் – ஒன்று சடடை இல்லாமல் பரீஷை எழுதவேண்டும், இல்லை, சடடையை கழற்றிவிட்டு எழுதலாம். இது புரியவில்லை என்பது மடத்தனம். ஆகவே, இந்த விஷயங்களில் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பரிட்சை எழுத வந்தது யார் தவறு…? இதே போல் பெண்கள் ஷால் அணியக்கூடாது என கட்டுப்பாடு.. இப்பவெல்லாம் யாரும் துப்பட்டா போட வேண்டிய இடத்தில் போடுவதில்லையே முகம் மூடத்தானே அந்த துப்பட்டா..அதை கழட்ட சொல்லிட்டாங்களாம்..அதானால் மன உளைச்சலாம்…அடேய்…

தோடு ஜிமிக்கி ஆபரணங்கள் கழட்டுவது என்ன அசிங்கமாம்..எந்த காலத்தில் இருக்காங்க…திருட்டை கண்டு பிடிக்க ஒரு வழி என்றால் திருட ஆயிரம் வழி அல்லவா…

ஜன., 31ம் தேதியே, இந்த கட்டுப் பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஹால் டிக்கெட் டிலும், தேர்வுக்கு விண்ணப்பித்த, http://cbseneet.nic.in இணைய தளத்தி லும், இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப் பட்டிருந்தன.

ஆனாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாணவர் கள், இந்த கட்டுப்பாடு களே தெரியாமல், நேற்று தேர்வு எழுத வந்துவிட்டு, விதிமுறைகள் எவ்வளவு தெளிவாக குறிப்பிடப்பட்டாலும் அதை மீறுவது அல்லது முழுவதுமாக கடை பிடிக்காமல் இருப்பது என்பது நம் நாட்டவரின் பிரத்தியேக குணம் போலும்…

அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது நம்க்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.