தமிழ்நாடு மின்வாரியத்தால் அமைக்கப்படும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.85,723 கோடி நிதி உதவிவழங்க மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு மின்வாரியம், மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற் றால் 5 முதல் 8 ஆண்டுகள் வரை செயல்படுத்தப்பட உள்ள மின்னுற் பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிர் மான திட்டங்களுக்காக முறையே ரூ.60,063 கோடி மற்றும் ரூ.25,660 கோடி என மொத்தம் ரூ.85,723 கோடிக்கான இரு ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டு, ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும், முதல்தவணையாக ரூ.10,453 கோடிக்கான அனுமதி கடிதத்தை அமைச்சர் தங்கமணியிடம் ஊரக மின் மயமாக்கல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.வி.ரமேஷ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகதலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார், ஊரக மின் மயமாக்கல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.வி.ரமேஷ், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழக இயக்குநர்கள், உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.