கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடைபெற்ற பேருந்து ஊழியர் – அரசு பேச்சு வார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம் இன்றே துவங்கி பொதுமக்கள் பாதிப்படைவது ஏற்புடையது அல்ல அதே நேரத்தில் தொழிலாளர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த பேருந்து தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்று இயக்கும் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் தீடிர் முடிவால் பேருந்துகளை அன்றாடம் பயன்படுத்தும் ஏழை எளிய நடுத்தர மக்களை நடு வீதியில் பரிதவிக்கவிடுவது நியாயமா?

பேருந்து தொழிலாளர் சும்மார் 1.5 லட்சம் பேர் உரிமைகள் காக்கப் படவேண்டும் என்பது சரியே, அதே வேளையில் அரசு பேருந்தில் தினசரி பயணிக்கும் சுமார் 15 லட்சம் பொது மக்கள் நலனும் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? நாளை முதல் போராட்டம் என்று அறிவித்து விட்டு இன்றய திடீரென பொதுமக்களை நடுவழியில் குழந்தை குட்டிகளோடு இறக்கி விட்டு பரிதவிக்க விடுவது என்ன நியாயம். அரசாங்கம் என்ன சொன்னாலும் போராட்டம் நடந்தே தீரும் என்று முழங்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெற்றி புன்னகை கவனிக்கப்படவேண்டியது.

கம்யூனிஸ்டுகள் பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை வீட தீவிரமாக போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலே அதிகம் நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் தொழிற்சாலைகளை இயங்கவிடமாட்டார்கள் பேருந்துகளை ஓடவிடமாட்டார்கள், புதிதாக நிறுவனங்களை நிறுவ விடமாட்டார்கள் இருக்கும் தொழிலாளர்களையும் நிம்மதியாக வாழவிடமாட்டார்கள், ஆக உள்நோக்கமுள்ள இவர்களது பின்புலத்தை அரசு கவனித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை போராட்டம் நடத்த விட்டு விட்டு பின்பு நடவடிக்கை எடுப்பது விட போராட்டம் நடைபெறாமல் / பரவாமல் பார்த்துக்கொள்வது தான் அரசாங்கம் மக்களுக்கு செய்யும் கடமையாகும். போராட்டத்தின் நடுவே எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து கழகங்களின் கடன் சுமையும் நிலுவை தொகையும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சனை என்பதால் இதுவும் தமிழகத்தை இதுவரை ஆண்ட கழக ஆட்சிகளின் நிருவாக சீர்கேடுகளை காட்டுவதால் இவைகளும் சீர்செய்யப்பட வேண்டும் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் எல்லாம் லாபகரமாக இயங்கும் காலகட்டத்தில் அரசு பேருந்துகள் எல்லாமே பெரும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? இதனை சீர்செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த போராட்ட நேரத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளை அடிக்காமல் பொது மக்களை பாதுகாக்க வேண்டும்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.