பிரதமர் நரேந்திர மோடியின் மனதின்குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சிக்கு நாட்டுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாக அகில இந்தியவானொலி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தில்லியில் அகில இந்தியவானொலியின் வெளிப்புற சேவைகள்பிரிவு இயக்குனர் அம்லான் ஜோதி மஜும்தார் கூறியதாவது:


அகில இந்திய வானொலியின் ஹிந்தி மற்றும் வெளிநாட்டு சேவைகள் ஒளிபரப்பு, 150 நாடுகளில் ஒளிபரப்பாகிறது. உலகம்முழுவதும் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, தமது தாய்நாட்டின் பிரதமர் நிகழ்த்தும் உரையைக் கேட்பதற்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.


பிரதமரின் வானொலி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு முறையும் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய வானொலிக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. இதில் ஆப்பிரிக்கநாடுகளில் வசிக்கும் குஜராத் மாநிலத்தவரிடம் இருந்து அதிக அளவில் கடிதங்கள் வருகின்றன.


இதேபோல், வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகியநாடுகளில் இருந்தும் பிரதமரின் நிகழ்ச்சி தொடர்பாக கடிதங்கள் வருகின்றன. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழக்கச் செய்தபோது, உள்நாட்டில் குறிப்பிட்ட பிரிவினர் இதை விமர்சித்தனர். ஆனால், வெளிநாடுகளை சேர்ந்த நேயர்களோ, ஊழலை முடிவுக்குகொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று வரவேற்பு தெரிவித்தனர் என்றார் .

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.