பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. பாஜக ஆட்சியின் 3 ஆண்டுகள் நிறைவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

வரும் 26-ம் தேதி அசாம்மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று 3 ஆண்டு ஆட்சி நிறைவு கொண்டாட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதைத்தொடர்ந்து வரும் ஜூன் 15-ம் தேதிவரை பாஜக சார்பில் நாடுமுழுவதும் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
 

இந்நிலையில் இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் செய்தியார்களிடம் கூறியதாவது:

பாஜக தலைமையில் வலுவான அதிகாரத்துடன் வரும்  2019-ம் ஆண்டில் பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சிக்குவருவார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவை உலக அளவில் பொருளாதரத்தில் ராணுவசக்தியாக மாற்றி உள்ளார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான அதிகாராத்துடன் மத்திய அரசின் அடுத்த அரசாங்கம் உருவாகும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். பிரதமர் மோடி அனைவரின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தை இயக்கிவருகிறார். எதிர்காலத்தில் இது தொடரும். மோடியின் அரசாங்கம் ஒரு பெரிய இதயத்துடம் இயங்கிவருகின்றது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply