மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யநாயுடு டெல்லியில் நேற்று கூறியதாவது: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, பள்ளி பாடத்தில் விளையாட்டு கல்வியைப் புகுத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

விளையாட்டில் சிறந்துவிளங்கும் மாணவ, மாணவிகள் மண்டல, மாநில மற்றும் தேசியஅளவில் அடுத்தடுத்துச் செல்ல பள்ளியில் இருந்தே குடும்பத்தினரும், சமூகத்தினரும் அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அளிப்பார்கள் என நம்புகிறேன்.

விளையாட்டு உடல் மற்றும் மனரீதியாக மாற்றத்தை தருவதுடன், குழு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கலாச்சார விளையாட்டான கபடி மற்றும் கோ கோ-வை ஒலிம் பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியை பிரதமர் எடுத்துவருகிறார். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply