மாட்டிறைச்சிக்கு தடை என்று தவறாக பிரச்சாரம்,

பசு கொலையாளிகளுக்கு துணை போகும் ஸ்டாலின் – தமிழிசை கண்டனம். 

 

ஒழுங்கு படுத்தும் சட்டத்தை தவறாக அண்ணன் ஸ்டாலின் புரிந்துகொண்டாரா? இல்லை புரிந்தும் புரியாதது போல் போராட்டம் நடத்துகிறாரா? அல்லது இதை புரிந்து கொள்ளும் சக்தி அவருக்கு இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அவர் உண்மைக்கு புறம்பான அத்தனை கருத்துக்களையும் அதில் சொல்லி இருக்கிறார். இதற்க்கு நான் பதில் சொல்வதை விட கேரளா உச்ச நீதிமன்றம் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறது. இது மாட்டு இறைச்சிக்கு நம் தடை செய்யவில்லை, அதை விற்பனை செய்ய தடை செய்யவில்லை, அதை உண்பதையும் தடை செய்யவில்லை, இதை தான் நங்கள் தெளிவாக சொல்லிக்கொண்டு வருகிறோம். கொடூரமாக இளம் கன்றுகளை நடு ரோட்டில் வெட்டி சாய்த்து, போராட்டம் என்ற பெயரில் ஒரு கொடூரத்தை அரங்கேற்றிய கேரளா இளைஞர் காங்கிரஸ், மற்றும் அன்னான் ஸ்டாலின் போன்றவர்கள் எல்லாம் பசுவை கொல்வதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். பசு கொலையாளிகள் என்று இவர்களை சொல்லலாம்.

 

இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மாநில & மத்திய அரசுகள் விலங்கின பாதுகாப்பு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னதின் காரணத்தினால் விலங்கின பாதுகாப்பு என்ற 38வது பிரிவின் கீழ் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? 

 

'திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக மக்கள் விரோத பாஜக என்று கூறி வருகிறார். நான் கேட்கிறேன் திமுக எந்த மாதிரியான மக்கள் நல திட்டங்களை செய்துள்ளது?

 

திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணையை பெயரிட்டு சொல்ல முடியுமா? பாஜக அரசு செய்துள்ள 3 ஆண்டு சாதனைகளை பட்டியலிட முடியும். விவாதிக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

பசுவதை விவகாரத்தைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி விற்கவோ யாரும் உண்பதற்கோ தடை விதிக்கப்படவில்லை. தவறுதலாக மாட்டிறைச்சிக்கு தடை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். பால் தரும் பசுக்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன.

 

ரூ.2 ஆயிரம் கோடிக்கு சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காகவே புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை அரசியலாக்க வேண்டாம்'' 

 

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.