உலகளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவராக இருக்கிறார் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அவரிடம் செய்தி வாசிப்பாளர் ஒருவர் "நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?" எனக் கேள்விகேட்க புன்னைகையை பதிலாக தந்திருக்கிறார் மோடி.

பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். பீட்டர்ஸ் பெர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்க வந்திருந்தார் என்பிசி. (National Broadcasting Company) செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் மேகின்கெல்லி.

விழா அரங்குக்கு வந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை கைகுலுக்கி வரவேற்றார் கெல்லி. அப்போது, பிரதமர் நரேந்திரமோடி, ட்விட்டரில் மேகின் கெல்லி பதிவேற்றியிருந்த புகைப்படம் நன்றாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். அதற்கு மேகின்கெல்லி, "நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?" என வினவியுள்ளார். மேகின் கெல்லியின் கேள்விக்கு "ஓ யெஸ்.." என்று கூறி புன்னைகையை பதிலாகத்தந்த மோடி, தனது உரையாடலைத் தொடர்ந்தார்.

இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைரலானது. இந்நிலையில், ஒருசெய்தித் தொகுப்பாளராக இருந்துகொண்ட ஒருநாட்டின் தலைவரிடம் கேள்விகேட்கும் போதிய முன்னேற்பாடை கெல்லி செய்யவில்லை என விமர்சனங்கள் குவிந்தன.

சிறிதுநேரத்தில் ட்விட்டரில் மேகின் கெல்லி ட்ரால் செய்யப்பட்டார்.ட்விட்டராட்டி ஒருவர், "@megynkelly நீங்கள் ஒரு பத்திரிகையாளர். கேள்விகள் கேட்கும் முன் சிறிதேனும் ஆயத்தமாகியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு ட்விட்டராட்டி, "@megynkelly ட்விட்டரில் மோடியைப் பின் தொடர்பவர் களையும் உங்களைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்" எனப் பதிவு செய்திருந்தார்.

ட்விட்டர் சமூக வலைதளத்தில் உலகளவில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் தலைவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ( 31.2 மில்லியன்) அவருக்கு அடுத்ததாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி அதிகம் ஃபாலோ செய்யப்படும் தலைவராக இருக்கிறார். அவரை 30.3 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.