பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் திருத்தப்பட்ட சட்டத்தின் புதியவிதிகளை குஜராத் மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது.


குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா, அந்த மாநில சட்ட பேரவையில் கடந்த மார்ச் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தமசோதாவுக்கு மாநில ஆளுநர் ஓ.பி.கோலி கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், புதிய விதி முறைகளை அந்த மாநில அரசு சனிக் கிழமை வெளியிட்டது.


அதன்படி, பசுவதையில் ஈடுபடுவோருக்கு இனி அதிக பட்சம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கும், உரிய அனுமதிபெறாமல் மாடுகளை வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள்படி தண்டனை வழங்கப்படும்.


திருத்தப்பட்ட புதியசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பிணையில் வெளிவர இயலாது. மாட்டிறைச்சியை சோதனை செய்து உறுதிப்படுத்த 5 இடங்களில் தடயவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 நடமாடும் ஆய்வுக் கூட வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
குஜராத் விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பு பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுவரை சிறையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக பதவி வகித்த நரேந்திர மோடி பசுவதைக்கு முழுமையாக தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.