1974ஆம் ஆண்டை போன்று  காங்கிரசுக்கு எதிரான அலை காணப்படுகிறது பிகாரில் மக்கள் தந்த தீர்ப்பானது ஒருங்கிணைந்த தேசியஜனநாயகக் கூட்டணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். அது ஐக்கிய ஜனதா_தளத்துக்கு மட்டும் அளிக்கப்பட்ட வெற்றியல்ல என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பாஜக.வின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திரமோடி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு தரப்படும் முக்கியத்துவத்தை பொருத்து கொள்ள முடியாத நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜக,வுடனான உறவை முறித்துக்கொண்டது. இந்நிலையில் நரேந்திரமோடி முதல் முறையாக பிகார் மாநிலத்தைச்சேர்ந்த பா.ஜ.க தலைவர்களுடன் ஆடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்துரையாடினார். இவர் குஜராத்தில் இருந்தபடி மொபைல்போன் மூலம் பிகாரில் உள்ள சுமார் 1500 கட்சிப்பிரமுகர்களுடன் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததோடு தனதுகருத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்போது மோடி பேசியதாவது:
நாட்டில் 1974ஆம் ஆண்டு இருந்ததைப்போல, காங்கிரசுக்கு எதிரான அலை இப்போது காணப்படுகிறது. பிகாரில் மக்கள் தந்த தீர்ப்பானது ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக_கூட்டணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். அது ஐக்கிய ஜனதா தளத்துக்கு மட்டும் அளிக்கப்பட்ட வெற்றியல்ல. 1974இல் நடந்ததைப்போலவே, இப்போது மக்களின் தீர்ப்புக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டப்படும் என்று மோடி பேசினார்.

Leave a Reply