மத்திய அரசுக்கு மாநிலஅரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காணஇயலும் என்று மாநிலங்களவை உறுப்பினர் ரூபாகங்குலி தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிபொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்விழா  மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மத்தியஅரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பில் கருத் தரங்கு சனிக் கிழமை மாலை நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரூபா கங்குலி கலந்துகொண்டார்.


முன்னதாக, இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய அரசு மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. பொதுமக்களின் நலன் காக்கவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசானது மக்களுக்கான மானியங்களை அவர்களதுகைகளுக்கே நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசுக்கும் பணம் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கு கடன் கிடைப்பதற்கான வழிமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளன. திருப்பூர் தொழில் துறையில் வளர்ச்சிபெற்ற நகரம். இருப்பினும் நீராதாரம் உள்ளிட்டவை இங்கு மாசடைந் துள்ளன. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நாட்டைமீட்க தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்கென பிரத்யேகமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியஅரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய மாநில அரசுகள் ஒத்துழைக்கவேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காண இயலும்.


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கை தொடக்கத்தில் சற்றுசிரமமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.