இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும்விதமாக பா.ஜ., சார்பில் 'விடுதலை 70' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதன்படி மத்திய அமைச்சர்கள் அனைவரும் நாடுமுழுவதிலும் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் இன்று தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சால குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் வெங்கைய்ய நாயுடு  தனது இஷ்ட தெய்வமான வீரஜக்க தேவி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய வெங்ககைய்ய நாயுடு, நாடுசுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த 70 ஆண்டுகளில் 68 ஆண்டுகள் இந்தியாவில் வளர்ச்சி இல்லை. லஞ்சம், ஊழல், பெண் பாதுகாப் பின்மை ஆகியனவே அதிகரித்துள்ளது.

 

பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் நடந்துவருகிறது. ஊழல், பெண் பாதுகாப்பின்மை குறைந்துள்ளது. சுதந்திரபோராட்ட வீரர்களையும், தியாகிகளையும் கவுரவிக்கும் விதமாகவே பா.ஜ.க, இந்த நிகழ்ச்சியை நடத்திவருகிறது. தென்தமிழகத்தில்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம் உள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக சிந்து வெள்ளிபதக்கம் வென்றுள்ளது பெருமை அளிக்கிறது என்றார்.

பாஞ்சாலங் குறிச்சியை தொடர்ந்து வ.உ.சி., நினைவிடம், எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவிடம் ஆகியவற்றிற்கும் வெங்கைய்ய நாயுடு செல்லஉள்ளார்.

Leave a Reply