பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி,அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட 2 நாள் பயணமாக ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் அசாம் செல்கிறார்.
கடந்தவாரம் கோக்ரஜார் மாவட்டத்தில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்டமோதல், கலவரமாக மாறி உள்ளது. இதில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இனகலவரத்தால் மோசமாக பாதிக்கபட்ட பகுதிகளை ஜூலை 30 ,31ம் தேதிகளில் அத்வானி பார்வையிடுகிறார் .