2ஜி   அரசுக்கு ஏற்பட்டிருக்கும்  பின்னடைவையே  காட்டுகிறது 2ஜி ஏலத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான வருமானம் கிடைத்திருப்பதன் மூலம் ஏற்ப்பட்டிருக்கும் தோல்வி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவையே காட்டுகிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது “”2ஜி ஏலத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ளதோல்வி, தொலைத் தொடர்பு துறையை அரசு தவறாக_கையாள்வதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது . நாட்டின் பொருளாதாரத்தை அரசு எந்தத்திசையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டும்வகையில் உள்ளது.

ஒரு பொறுப்பான அரசு இதற்க்காக வருத்தப்படும்; காரணங்களை ஆராயும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்களும், செய்தித் தொடர்பாளர்களும் 2ஜி ஏலம்தோல்வி அடைந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

Tags:


Leave a Reply