பா.ஜ.க சார்பில் 2 நாட்களில் 300 தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது . மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 15–ந் தேதி நடைபெறும் நிலையில் பா.ஜனதா தேர்தல் பிரசாரயுக்தி குறித்து பாஜக தலைவர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் 'முலக் மைதான்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 2 நாட்களில் 300 பிரசார பொதுக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

இந்தபிரசாரம் நேற்று (திங்கட்கிழமை), இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:–

'முலக் மைதான்' பிரசாரம் அனைத்து தொகுதியிலும் நடக்கிறது. அதிகப் பட்ச வாக்காளர்களை தொடர்புகொள்ளும் வகையில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது. தெற்கு மராட்டியத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் விவசாய மந்திரி ராதாமோகன் சிங், சதாரா மற்றும் சாங்கிலியில் பா.ஜ.க தேசிய துணை தலைவர் புருசோத்தம் ரூபேலா, புனேயில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மும்பையில் முன்னாள் கிரிக்கெட்வீரர் சித்து, லதூர் மற்றும் சோலாப்பூரில் முரளிதர் ராவ், தானேயில் தேசிய துணை தலைவர் வினய், நாசிக்கில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

மேலும் டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்திர குப்தா, மத்திய மந்திரிகள் உமா பாரதி, கைலாஸ் மிஸ்ரா ஆகியோரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இந்த 'முலக் மைதான்' பிரசாரத்தை பா.ஜ.க தொண்டர்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply